இந்த பழக்கங்கள் உங்களை செல்வந்தர்களாக்கும்..!
நீங்கள் சம்பதிக்கும் பணத்தில் ஒரு பகுதியை முதலீடு செய்ய கற்றுக் கொள்ளுங்கள். தங்கம், ஷேர் மார்க்கெட், பிபிஎப், நிலம், வீடு, கடை உள்ளிட்டவைகளில் தங்களுக்கு தெரிந்தவை மீது முதலீடு செய்தால் எதிர்காலத்தில் அவற்றின் மதிப்பு பல மடங்கு உயரும். இதனால் செல்வந்தர்களாக மாறி விடுவீர்கள்.
50:30:20 ரூலை பின்பற்றுங்கள். அதாவது 50% குடும்பச் செலவுகள், 30% இதரச் செலவுகள் மீதி 20% சேமிப்பு அல்லது முதலீடு செய்யவும்.
சம்பாதிக்கும் பணம்.. செலவுகள், முதலீடு திட்டம், முதலீட்டு லாபம் ஆகியற்றை சரியாக எழுதி வைக்கவும். முதலீட்டில் இருந்து கிடைக்க கூடிய லாபத்தை வைத்து மீண்டும் முதலீடு செய்யவும்.
செலவுகளை எழுதி வைத்து அதில் அனாவசிய செலவு எது என்று குறித்து வைத்து அந்த செலவை மீண்டும் செய்யாமல் இருக்க வேண்டும். இவ்வாறு செய்வதனால் குறிப்பிட்ட அளவு பணம் மிச்சம் ஆகும். இதை சேமித்து பயனுள்ள விஷயங்களுக்கு பயன்படுத்தலாம்.
பல முதலீடுகள் இருக்க வேண்டும். தங்கம், நிலம், வீடு என்று அனைத்திலும் முதலீடு செய்யத் தொடங்கினால் நிச்சயம் எதிர்காலத்தில் அதிக லாபம் கிடைக்கும். இதனால் கோடீஸ்வரர் ஆகலாம்.