பெட்ரோலின் விலை உயர்வால் இவைகளும் விலை உயர்ந்துவிட்டது! அதிர்ச்சியில் பாமர மக்கள்!
பெட்ரோல் டீசல் விலை உயர்வால் காய்கறி விலையும் உயர்ந்துள்ளது.திண்டுக்கள் மாவட்டத்தில் காந்தி காய்கறி மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்ந்துள்ளது.சென்ற மாதம் வரை குறைந்த அளவே காணப்பட்ட காய்கறி விலையானது இப்பொழுது சற்று அதிகரித்துள்ளது.அதுமட்டுமின்றி காய்கறிகளின் வரத்துகள் அதிகாமான நிலையில் விலை குறைவாக இருந்தது.ஆனால் பெட்ரோல் விலை ரூபாய் 100 நோக்கி அதிகரித்து வருவதாலும் டீசலின் விலை ரூபாய் 87 அதிகரித்ததாலும் காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது.
இப்படியே அதிகரித்து சென்றால் பாமர மக்கள் நிலைமை மிகுந்த கவலைக்கிடமாக மாறிவிடும்.30 ரூபாய்க்கு விற்றுக்கொண்டிருந்த பச்சைப்பட்டாணி இப்போது 50 ரூபாய்க்கு விற்பனை ஆகுகிறது.20 ரூபாய்க்கு விற்பனை ஆகிக்கொண்டிருந்த கத்தரிக்காய் இப்பொழுது 60 ரூபாயாக அதிகரித்துள்ளது.பத்து ரூபாய்க்கு விற்பனை ஆகிக் கொண்டிருந்த தக்காளி இப்பொழுது நாற்ப்பது ரூபாய்க்கும் விற்பனையாகிறது.முப்பது ரூபாய்க்கு விற்றுக்கொண்டிருந்த உருளைக்கிழங்கு இப்பொழுது நாற்ப்பது ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.இருபது ரூபாய்க்கு விற்பனை செய்து கொண்டிருந்த பீன்ஸ் இப்பொழுது அறுபது ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு விலைவாசி உயர்ந்தால் பாமர மக்கள் உணவு உண்பதே கேள்வி குறியாகிவிடும்.