Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இனி இந்த சம்பவங்கள் நடக்கவே கூடாது! மதிமுக தலைவர் வைகோ வெளியிட்ட அறிக்கை!!

#image_title

இனி இந்த சம்பவங்கள் நடக்கவே கூடாது! மதிமுக தலைவர் வைகோ வெளியிட்ட அறிக்கை!
தமிழ்நாட்டில் இனிமேல் கள்ளச்சாராயத்தால் உயிரிழப்பு ஏற்படக்கூடாது என்று மதிமுக வைகோ அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் சில தினங்களுக்கு முன்னர் கள்ளச்சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்தனர். விழுப்புரம் மட்டுமில்லாமல் வேலூர் மாவட்டத்திலும், செங்கல்பட்டிலும் கள்ளச்சாராயம் குடித்ததால் உயிரிழப்பு ஏற்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மதிமுக தலைவர் வைகோ அவர்கள் இந்த சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மதிமுக கட்சி தலைவர் வைகோ வெளியிட்ட அறிக்கையில் “கள்ளச்சாராயத்தால் 22 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை அளிக்கின்றது. கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிமேல் தமிழகத்தில் கள்ளச்சாராயத்தால் உயிர்பலி ஏற்படக்கூடாது. அரசு மதுபானக் கடைகளின் எண்ணிக்கையை குறைத்து பூரண  மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.
Exit mobile version