இன்றைய காலத்தில் பின்பற்றப்படும் உணவுப் பழக்கங்கள் உடலில் புதிய புதிய நோய் பாதிப்புகள் உருவாக காரணமாக இருக்கிறது.நாம் உட்கொள்ளும் உணவுகள் உடலுக்கு ஊட்டச்சத்துக்கள் வழங்குவதை விட அதிக நச்சுக் கழிவுகள் தேங்க காரணமாக அமைகிறது.
உடலில் உள்ள உறுப்புகள் இயற்கையான முறையில் கழிவுகளை சுத்தம் செய்து வெளியேற்றிவிடும் என்றாலும் நாமும் இதற்காக கூடுதல் எபோர்ட் போட வேண்டியது அவசியமாக பார்க்கப்படுகிறது.
உணவு மட்டுமின்றி மாசு நிறைந்த நீர் மற்றும் காற்று போன்றவற்றாலும் உடலில் அதிகப்படியான கழிவுகள் தேங்குகிறது.நம் உடலில் அதிகப்படியான நச்சுக் கழிவுகள் தேங்கி இருப்பதை உடலில் வெளிப்படும் அறிகுறிகளை வைத்து அறிந்து கொள்ளலாம்.
1)வாய் துர்நாற்றம்
உங்கள் வாயில் இருந்து அதிகப்படியான கெட்ட வாயுக்கள் வெளியேறினால் அது உடலில் நச்சுக் கழிவுகள் தேங்கி இருப்பதை குறிக்கிறது.
2)உடல் துர்நாற்றம்
உங்கள் உடலில் இருந்து அளவிற்கு அதிகமாக வியர்வை துர்நாற்றம் வெளியேறுகிறது என்றால் அது நச்சுக் கழிவுகள் தேங்கி இருப்பதை உணர்த்துகிறது.
3)சரும பிரச்சனை
உங்களுக்கு அடிக்கடி சருமம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுகிறது என்றால் அது உடலில் நச்சுக் கழிவுகள் தேங்கி இருப்பதை காட்டுகிறது.முகப்பரு,ரேஷஸ் போன்ற பாதிப்புகள் அடிக்கடி ஏற்படுகிறதா என்பதை கவனியுங்கள்.
4)உடல் சோர்வு
உங்கள் உடல் வழக்கத்தைவிட அதிகமாக சோர்வை சந்திக்கிறது என்றால் அதை அலட்சியமாக கருதாதீர்கள்.இது உடலில் அதிகப்படியான கெட்ட கழிவுகள் தேங்கி இருப்பதற்கான அறிகுறிகளில் ஒன்றாகும்.
5)வயிறு பிரச்சனை
அடிக்கடி வயிறு வலி,வயிறு உப்பசம்,செரிமானப் பிரச்சனை,மலச்சிக்கல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் உடலில் கெட்ட கழிவுகள் தேங்கி இருக்கிறது என்று அர்த்தம்.
6)அடிக்கடி தலைவலி
நம் அனைவருக்கும் சில சமயம் வேலைப்பளு,தூக்கமின்மை,மன அழுத்தம் போன்ற காரணங்களால் தலைவலி பாதிப்பு ஏற்படுவது பொதுவான விஷயம் தான்.ஆனால் காரணம் ஏதும் இன்றி தலைவலி பாதிப்பு ஏற்படுகிறது என்றால் அது உடலில் அழுக்குகள் தேங்கி இருபத்தை காட்டுகிறது.
உடலில் தேங்கிய கெட்ட கழிவுகளை வெளியேற்ற இஞ்சி,சீரகம்,எலுமிச்சை மற்றும் புதினா இலைகளை தண்ணீரில் ஊறவைத்து பருகி வரலாம்.