கோடையில் 3 நாட்கள் வரை தயிர் புளிக்காமல் இருக்கு இந்த டிப்ஸ் உதவும்!
வெயில் காலத்தில் சமைத்த உணவுகள் மற்றும் உணவுப் பொருட்கள் எளிதில் கெட்டுவிடும்.அதிகப்படியான வெயிலால் வெப்பநிலை உயர்ந்து உணவுப் பொருட்களில் பாக்டீரியாக்கள் வேகமாக வளரத் தொடங்கி விடுவதன் காரணமாக அவை எளிதில் கெட்டு விடுகிறது.
எனவே வெயில் காலத்தில் உணவுப் பொருட்டாக்களை கவனமாக பராமரியுங்கள்.சில உணவுப் பொருட்கள் எளிதில் புளித்து விடும்.இதில் தயிரை பற்றி சொல்லவே வேண்டியதில்லை.தயிர் உடலுக்கு குளிர்ச்சி கொடுக்க கூடிய பொருள் என்பதினால் அவை கோடை காலத்தில் அனைவரது வீடுகளிலும் அவசியம் இருக்கும்.
பொதுவாக தயிர் கெட்டியாக,புளிக்காமல் இருப்பதை தான் மக்கள் விரும்புகின்றனர்.ஆனால் கோடை காலத்தில் அவை எளிதில் புளித்து விடும்.ஆனால் சில டிப்ஸை பின்பற்றினால் பல நாட்களுக்கு தயிரை புளிப்பு இல்லாமல் பயன்படுத்தலாம்.
தயிர் புளிக்காமல் இருக்க உதவும் டிப்ஸ் இதோ:
டிப் 01:-
காய்ச்சிய பால் வெது வெதுப்பான சூட்டிற்கு வந்ததும் ஒரு பீங்கான் அல்லது மண் பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ளவும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி தயிர் சேர்த்து கலந்து விடவும்.பிறகு தட்டு போட்டு மூடி வைத்தால் 8 மணி நேரத்தில் புளிப்பு இல்லாத சுவையான தயிர் கிடைக்கும்.
பால் காய்ச்சிய பாத்திரத்தில் தயிர் போடுவதை தவிர்த்தால் அவை எளிதில் புளிக்காது.
டிப் 02:-
வெது வெதுப்பான பாலில் சிறிது தயிர் மற்றும் ஒரு துண்டு தேங்காய் சேர்த்தால் புளிப்பு இல்லாத கெட்டி தயிர் கிடைக்கும்.
டிப் 03:-
ஒரு ஸ்பூன் பொடியாக நறுக்கிய வாழை இலையை தயிரில் போட்டு வைத்தால் அவை விரைவில் புளிக்காமல் இருக்கும்.