பொங்கலுக்கு வீட்டு தரையை பளபளன்னு வைக்க.. இந்த டிப்ஸ் ஹெல்ப் பண்ணும்!!

0
86

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் வருகின்ற தை 01 அதாவது ஜனவரி 14 அன்று கோலாகலமான கொண்டாடப்பட இருக்கின்றது.மார்கழி இறுதி நாளில் போகி பண்டிகை,தை முதல் நாள் சூரியப் பொங்கல்,தை இரண்டாம் நாள் மாட்டுப்பொங்கல்,தை மூன்றாம் நாள் கரிநாள் கொண்டாடப்பட இருக்கின்றது.

இந்த பண்டிகை நாளில் வீட்டை துடைத்து சுத்தம் செய்து வாசலில் கோலமிட்டு பொங்கல் வைப்பது வழக்கமாக இருக்கிறது.இந்நாளில் வீட்டை சுத்தம் செய்வது என்பது இல்லத்தரசிகளுக்கு பெரும் கவலை தரும் ஒரு விஷயமாகவே இருக்கிறது.கிச்சன்,வீடு,பூஜை அறையை சுத்தம் செய்து முடிப்பதற்குள் அவர்கள் ஓய்ந்துவிடுவார்கள்.

ஆனால் தற்பொழுது சொல்லப்பட உள்ள டிப்ஸை பின்பற்றினால் எளிய முறையில் வீட்டை சுத்தம் செய்துவிடலாம்.

வீட்டு தரையில் உள்ள அழுக்கு கறைகள் நீங்க டிப்ஸ்:

ஒரு பக்கெட்டில் தண்ணீர் ஊற்றி இரண்டு ஸ்பூன் வினிகர் மற்றும் ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறை பிழிந்து கொள்ளவும்.இந்த நீரை கொண்டு வீட்டு தரையை துடைத்தால் அழுக்கு கறைகள் முழுமையாக நீங்கிவிடும்.

அடுப்பில் உள்ள எண்ணெய் பசை மற்றும் அழுக்கு நீங்க டிப்ஸ்:

முதலில் அடுப்பில் காணப்படும் கறைகள் மீது தண்ணீர் கொண்டு ஸ்ப்ரே செய்ய வேண்டும்.பிறகு ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதில் சோடா உப்பு மற்றும் தூள் உப்பு சேர்த்து அடுப்பை தேய்க்க வேண்டும்.இவ்வாறு செய்தால் அடுப்பில் உள்ள கறைகள் நீங்கி பளிச்சிடும்.

கிட்சன் ஜிங்க் சுத்தம் செய்ய டிப்ஸ்:

ஒரு பாத்திரத்தில் வெது வெதுப்பான தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் கல் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பிறகு இந்த நீரை கிட்சன் ஜிங்கில் ஊற்றினால் படிந்துள்ள அழுக்குகள் வெளியேறிவிடும்.

பாத்ரூம் கறைகள் நீங்க டிப்ஸ்:

ஒரு பாத்திரத்தில் வெது வெதுப்பான தண்ணீர் ஊற்றி சோப் தூள்,பேக்கிங் சோடா,வெள்ளை வினிகர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து பாத்ரூம் தரையில் ஊற்றி 10 நிமிடங்கள் ஊறவிட வேண்டும்.பிறகு பிரஸ் கொண்டு தேய்த்தால் மஞ்சள் கறைகள்,பாசி,அழுக்குகள் அனைத்தும் நீங்கிவிடும்.