Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வீட்டு செலவை குறைத்து அதிக பணம் சேமிக்க இந்த டிப்ஸ் உங்களுக்கு உதவும்!

#image_title

வீட்டு செலவை குறைத்து அதிக பணம் சேமிக்க இந்த டிப்ஸ் உங்களுக்கு உதவும்!

உங்கள் வீட்டு செலவில் சில மாற்றங்களை கொண்டு வந்தாலே அதிக பணத்தை மிச்சப்படுத்த முடியும்.

டிப் 01:-

வீட்டிற்கு மளிகை செலவு அல்லது ஏதேனும் பொருட்கள் வாங்க உள்ளீர்கள் என்றால் அதை முதலில் ஒரு பட்டியல் போடவும். இதில் நீங்கள் வாங்கும் பொருட்கள் அவசியம் தேவைப்படுகிறதா? என்று ஆராய்ந்து பின்னர் அதை மட்டும் வாங்கவும். இவ்வாறு செய்வதினால் நமக்கு தேவை இல்லாத பொருட்கள் வாங்குவது தவிர்க்கப்படும். இதனால் பணம் மிச்சம் ஆகும்.

டிப் 02:-

காய்கறிகளை உழவர் சந்தை அல்லது வார சந்தையில் வாங்கி பயன்படுத்துங்கள். சந்தையில் குறைந்த விலைக்கு அதிக காய்கறிகள் கிடைக்கும். இதனால் பணத்தை சேமிக்க முடியும்.

டிப் 03:-

காய்கறி, மளிகை உள்ளிட்ட வீட்டிற்கு தேவையான பொருட்கள் எந்த கடையில் தரமாகவும், மலிவாகவும் கிடைக்கும் என்று அறிந்து வைத்துக் கொண்டு வாங்குங்கள். இதனால் அதிக பணத்தை மிச்சபடுத்த முடியும்.

டிப் 04:-

தின்தோறும் நீங்கள் செய்யக் கூடிய செலவை எழுதி வைத்து மாத இறுதியில் என்னென்ன செலவு செய்தோம், எவை தேவையற்ற செலவு என்று கணக்கிட்டு அடுத்த முறை அந்த செலவை முற்றிலும் தவிருங்கள். இதனால் அதிகப் பணத்தை மிச்சப்படுத்த முடியும்.

Exit mobile version