Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உங்களின் தீரா கஷ்டங்களுக்கு இந்த இரண்டு விளக்கு தான் தீர்வு!  உடனே இதை செய்து பலனை அடையுங்கள்!

உங்களின் தீரா கஷ்டங்களுக்கு இந்த இரண்டு விளக்கு தான் தீர்வு!  உடனே இதை செய்து பலனை அடையுங்கள்!

இவ்வுலகில் வாழும் மனிதர்கள் அனைவருக்கும் ஏதோ ஒரு கஷ்டம் இருக்க தான் செய்கிறது. அவ்வாறு மனிதர்களுக்கு கஷ்டமில்லை என்றால் சாமிக்கு அர்ச்சனையே இல்லை என்றும் கூறுவர். அவ்வாறு சிலர் தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக தீராத பிரச்சனைகளை சந்தித்து வருவர். அவ்வாறு உள்ளவர்கள் பிள்ளையாரிடம் இந்த இரண்டு விளக்கை போட்டால் போதும் நொடிப் பொழுதில் அனைத்தும் மாறிவிடும். இந்த கஷ்டம் நீக்கும் பரிகாரத்தை அனைவரும் வீட்டிலேயே செய்யலாம். வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று இதனை செய்ய வேண்டும். இரண்டு மண் அகல் விளக்குகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த இரண்டு மணல் அகல் விளக்குகளை நன்றாக கழுவி மஞ்சள் குங்குமம் வைக்க வேண்டும். அதில் தேங்காய் எண்ணெயை ஊற்ற வேண்டும். இந்த விளக்கில் விநாயகருக்கு உகந்தமையான அருகம்புல்லை சிறிய சிறிய துண்டுகளாக விளக்கில் உள்ள எண்ணெயில் உடைத்து போட வேண்டும். பின்பு தாமரைப் போர் திரியால் தீபம் ஏற்ற வேண்டும். இந்த அருகம்புல் தீபத்திற்கு முன் அமர்ந்து விநாயகரிடம் உங்கள் கஷ்டங்களை கூறி வேண்டிக் கொள்ளுங்கள். இந்த தீபத்தை தொடர்ந்து 11 வாரங்கள் ஏற்றினால் நல்ல பயன் கிடைக்கும். இதோடு மட்டும் விட்டுவிடாமல் இந்த பரிகாரத்தை செய்யும் பொழுது அன்றாடம் விநாயகர் கோவிலுக்கு சென்று தொப்பு காரணம் போடலாம். அவ்வாறு செய்வதால் விரைவில் பலனடைய முடியும். குறிப்பாக தேய்பிறை சங்கடஹர சதுர்த்தி வரும் பொழுது பிள்ளையாருக்கு பிடித்தமான கொழுக்கட்டை போன்றவற்றை பிரசாதமாக கொடுக்கலாம்.

Exit mobile version