Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அரசு அலுவகங்களில் இந்த இரண்டும் செயல்படுத்தப் படவேண்டும்!! இறையன்பு ஐஏஎஸ் உத்தரவு!!

These two should be implemented in government offices!! Divine IAS Ordinance!!

These two should be implemented in government offices!! Divine IAS Ordinance!!

அரசு அலுவகங்களில் இந்த இரண்டும் செயல்படுத்தப் படவேண்டும்!! இறையன்பு ஐஏஎஸ் உத்தரவு!!

தமிழக அரசின் தலைமை செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ் அவர்கள். இவர் அரசு ஊழியர்கள் மத்தியில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ளார். இவர் தற்போது கூடுதல் தலைமை செயலாளர்கள், முதன்மை செயலாளர்கள், செயலாளர்கள், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், துறை தலைவர்கள், கழகங்கள், அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் ஊழியர்களுக்கு  கடிதம் ஒன்றை அனுப்பயுள்ளார்.

அதில் அரசு அலுவலகங்களில் உள்ள கரும்பலகைகளில் திருக்குறள் மற்றும் ஆங்கில அர்த்தத்துடன் கூடிய தமிழ் சொற்களையும் எழுதி வைக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து அலுவலகங்களிலும் தினந்தோறும் ஒரு திருக்குறள் எழுதி அதற்கு கீழ் அந்த குறளுக்கான பொருளை எழுதி வைக்க வேண்டும். அதேபோல் ஒரு ஆங்கில சொற்களையும் அதற்குண்டான தமிழ் சொற்களையும் எழுத வேண்டும்.

இதை பற்றி ஏற்கனவே அரசு அலுவகங்களில் சொல்லப்பட்டு இருந்தாலும், ஒரு சில அலுவலகங்களை தவிர வேறு எங்கும் இது காட்சிப் படுத்த படவில்லை. இனிமேல் அனைத்து அலுவலகங்களிலும் இது சரியாக செயல் படுத்தப் படவேண்டும் என குறிப்பிடப் பட்டுள்ளது.

திருக்குறளில் அறத்துப்பால் மற்றும் பொருட்பால் ஆகிய அதிகாரங்களில் உள்ள குறள்களை அதன் பொருளுடன் எழுதி வைக்க வேண்டும். தமிழ் அகராதியில் உள்ள சொற்களில், ஓர் ஆங்கில சொல்லை அதற்குரிய தமிழ் சொல்லுடன் எழுத வேண்டும்.

தமிழ் வளர்ச்சி துறை, தமிழ் வளர்ச்சி மண்டல துணை இயக்குனர் மற்றும் மாவட்ட நிலை அலுவலர்கள், இந்த பணிகளை கண்காணித்து அதற்குரிய அறிக்கைகளை அரசுக்கு அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Exit mobile version