ஜனவரி 9ஆம் தேதி முதல் இவை ரேஷன் கடைகளில் வழங்கப்படும்! முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைக்கின்றார்!
தமிழர்களுக்கே உரிய பண்டியான பொங்கல் திருநாள் அன்று எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழக்குவது வழக்கம் தான். அந்த வகையில் கடந்த ஆண்டு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. அந்த பொருட்கள் தரமற்றதாகவும், சுகாதாரமற்றதாகவும் இருந்ததாக பல்வேறு தரப்பிலிருந்து புகார்கள் எழுந்து வந்தது. அதனை தொடர்ந்து இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு பற்றி சென்னை தலைமை செயலகத்தில் மு க ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆயிரம் ரூபாய் ரொக்க பணம், பச்சரிசி, சர்க்கரை வழங்கலாம் என முடிவு செய்யப்பட்டது. ஆனால் அதனை தொடர்ந்து கரும்பு வழங்க வேண்டும் என விவசாயிகள் தரப்பிலிருந்து தொடர்ந்து கோரிக்கை எழந்து வந்தது. அந்த கோரிக்கையை ஏற்று தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு சேர்க்க உத்தரவிட்டது. இந்த உத்தரவின் பேரில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க டோக்கன் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அனைத்து ரேஷன் கடைகளிலும் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.
டோக்கன் வரும் எட்டாம் தேதி வரை விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் ஜனவரி ஒன்பதாம் தேதி சென்னையில் முதல்வர் ஸ்டாலின் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணியை தொடங்கி வைக்கின்றார். அதனைத் தொடர்ந்து அன்றே மாநிலம் முழுவதும் உள்ள குடும்ப அட்டதாரர்களுக்கும். இலங்கைத் தமிழர் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்பு மற்றும் ரொக்க பணம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இந்த பொங்கல் பரிசு தொகுப்பினை தரமானதாக வழங்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் தமிழகம் முழுவதும் 238 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து 2 லட்சத்து 86 ஆயிரத்து 450 மெட்ரிக் டன் நெல் சேமிக்கும் விதமாக மதுரை கப்பாளூரில் புதிதாக சேமிப்பு கிடங்கு கட்டப்பட்டு வருகின்றது. கட்டுமான பணிகள் முழுவதும் முடிந்த நிலையில் விரைவில் முதல்வரால் திறந்து வைக்கப்படும் அதையடுத்து பாஜக அரசியல் செய்வதற்காக போராட்டம் நடத்தி வருகிறது.
தமிழகத்தில் தேங்காய் விவசாயிகள் தேங்காய் எண்ணெய் நியாய விலை கடைகளின் மூலம் விற்பனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர் இந்த கோரிக்கை முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்று பிறகு விரைவில் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.