Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த பெண்களுக்கு  கருப்பை கட்டி&வீக்கம் வர வாய்ப்பு உள்ளதாம்! இதை எளிதில் குணமாக்குவது எப்படி?

These women are likely to get uterine tumor & swelling! How to cure this easily?

These women are likely to get uterine tumor & swelling! How to cure this easily?

இந்த பெண்களுக்கு  கருப்பை கட்டி&வீக்கம் வர வாய்ப்பு உள்ளதாம்! இதை எளிதில் குணமாக்குவது எப்படி?

இன்றைய உலகில் பெண்கள் உடல் சார்ந்த பல பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.பெண்கள் வயது வந்த பின்னர் ஏற்படும் மாதவிடாய் நிற்கும் காலம் வரை பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

மாதவிடாய் தள்ளி போதல்,வெள்ளைப்படுதல்,நீர்க்கட்டி,தைராய்டு,கருப்பைவாய் புற்றுநோய்,கருப்பை வீக்கம் என்று பல பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர்.இதில் கருப்பை வீக்கம்,கட்டி போன்றவை தாய்மைக்கு தடையாக இருக்கிறது.

அதிலும் கருப்பை வீக்கம் மற்றும் கட்டி 20 முதல் 45 வயதிற்குள் உள்ள பெண்களுக்கு ஏற்படுகிறது.துரித உணவு,மன அழுத்தம்,வாழ்க்கைமுறை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் இது போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.கருப்பை பாதிப்பு இருந்தால் கணவன்-மனைவி உறவு வைத்துக் கொள்வது கடினமாக இருக்கும்.

இந்த கருப்பை வலி தாங்க முடியாமல் அதனை எடுத்துவிடலாம் என்று பல பெண்கள் நினைக்கின்றனர்.ஆனால் கருப்பையில் ஏற்படும் வலி,வீக்கத்தை சிகிச்சையின்றி எளிதில் குணமாக்கி கொள்ளலாம் என்பது பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை.

கருப்பை வலி,வீக்கம் குணமாக வீட்டு வைத்தியம்:

1)கிராம்பு – 05
2)திப்பிலி – 05
3)ஏலக்காய் – 02

ஒரு உரலில் 2 ஏலக்காய்,5 கிராம்பு மற்றும் 5 திப்பிலி போட்டு இடித்து எடுத்துக் கொள்ளவும்.பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி 3 நிமிடங்களுக்கு சூடாக்கவும்.

பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி அதில் இடித்த பொடியை சேர்த்து கலக்கி குடித்து வந்தால் கருப்பை வீக்கம்,கட்டி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.அதேபோல் மலைவேம்பை அரைத்து சிறு உருண்டைகளாக உருட்டி தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் 30 நாட்களில் கருப்பை தொடர்பான பாதிப்புகள் குணமாகும்.

Exit mobile version