தமிழகத்தில் மூன்று நாட்கள் இந்த பணிகள் நிறுத்தம்! அரசு நடவடிக்கை!

0
88
These works will be stopped for three days in Tamil Nadu! Government action!

தமிழகத்தில் மூன்று நாட்கள் இந்த பணிகள் நிறுத்தம்! அரசு நடவடிக்கை!

கொரோனா இரண்டாம் அலையின் தீவிரம் தமிழகத்தில் அதிகரித்து வருவதை தொடர்ந்து மாநில, மத்திய அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு கட்டமாக முழு ஊரடங்கும், ஒருபுறம் தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரமாக நடைபெறுகிறது.

கொரோனாவின் தடுப்பு பணிகள் தமிழகத்தில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டையில், கொரோனா தடுப்பூசி சேமிப்பு கிடங்கில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

அதன் பின் நிருபர்களை சந்தித்த அவர், இவ்வாறு கூறினார்:

தமிழகத்தில் தற்போதைய கையிருப்பாக 4.93 லட்சம் தடுப்பூசிகள் உள்ளன. அதில் சுமார் 2.69 லட்சம் தடுப்பூசிகள் 18 வயது முதல் 45 வயதுக்குட்பட்டோருக்கும், 2.24 லட்சம் தடுப்பூசிகள் 45 வயதுக்கு மேற்பட்டோருக்குமான ஒதுக்கீடு ஆகும். நாளொன்றுக்கு 2.5 லட்சம் முதல் 3 லட்சம் வரை தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் தற்போது, சென்னை மற்றும் இதர மாவட்டங்களில் தேவையான தடுப்பூசிகள் நாளையுடன் (இன்று) முடிந்துவிடும். மாவட்ட ஒதுக்கீடு என்ற அளவிலும் தடுப்பூசிகள் முடிந்துள்ளன. எனவே நமக்கு கிடைத்த தடுப்பூசிகள் முழுமையாக பயன்படுத்தி முடிப்பதற்கான உரிய அறிவுரைகள் மாவட்ட கலெக்டர்களுக்கும் வழங்கப்பட்டு இருக்கின்றன.

மேலும் இந்த மாதம் (மே) நமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தடுப்பூசிகள் எண்ணிக்கை 20.43 லட்சம். இதுவரை நமக்கு வந்தது 18.68 லட்சம். இன்றைய நிலவரப்படி, நமக்கு 1.74 லட்சம் தடுப்பூசிகள் கொடுக்கவேண்டியது உள்ளது. அவை எப்போது வரும்? என்பதை இன்னும் நமக்கு சொல்லவில்லை.

மத்திய சுகாதாரத்துறை செயலாளருடனான காணொலிக்காட்சி கூட்டத்தில், ஜூன் மாதத்தில் 42.58 லட்சம் தடுப்பூசிகள் நமக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என மத்திய அரசு தகவல் சொல்லியிருக்கிறது என்றும், ஆனால் முதல் சப்ளை ஜூன் 6-ந்தேதிக்கு பிறகும், இன்னொரு சப்ளை ஜூன் 9-ந்தேதியும் வரும் என்று சொல்லியிருக்கிறார்கள்.

இந்தியா முழுவதும் எல்லா மாநிலங்களுக்கும் தடுப்பூசி வழங்கும் பணி என்பதால், தமிழகத்துக்கு படிப்படியாக தடுப்பூசி வழங்கப்படும் என்றும், கடந்த மாதத்தை விட 2 மடங்கு கூடுதலாக ஒதுக்கீடு அளிக்கிறோம் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த ஒதுக்கீடு ஜூன் 2-வது வார தொடக்கத்திலேயோ, அல்லது இம்மாதத்தில் 15 நாட்களுக்கு பிறகோ கிடைக்கப்பெறும் என்று சொல்லியிருக்கிறார்கள். அந்தவகையில் முதற்கட்டமாக 3 லட்சம் தடுப்பூசிகள் நமக்கு வர இருக்கிறது.

ஏற்கனவே கூடுதல் தடுப்பூசி கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார்.ஆரம்பத்தில்  சுணக்கம் காட்டியிருந்தாலும், தற்போது தமிழக மக்கள் மிக ஆர்வமாக தடுப்பூசி போட்டுக் கொண்டு வருகிறார்கள்.

எனவே இந்த நேரத்தில் இது நமக்கு சவாலாக இருக்கப்போகிறது. எனவே இருக்கும் தடுப்பூசிகளை பிரச்சினையின்றி முழுமையாக பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. அடுத்தக்கட்ட தடுப்பூசிகள் வந்தவுடன் அந்தந்த மாவட்டங்களுக்கு பிரித்து கொடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

அதை தொடர்ந்து நிருபர்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடினார்.