ரூ 1000 உரிமைத் தொகை இவர்கள் பெற வாய்ப்பில்லை! நிதி அமைச்சர் வெளியிட்ட தகவல்!
கடந்த தேர்தலின் பொழுது திமுக மற்றும் அதிமுக என இரண்டு கட்சிகளும் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியது. அதில் திமுக குடும்ப தலைவிகளுக்கு ரூ 1000 உரிமைகள், பெண்களுக்கு அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லாதா பயணச்சீட்டு, நான் முதல்வன் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில் எதிர்பார்த்தபடியே திமுக ஆட்சிக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து பெண்களுக்கு கட்டணமில்லா பயணம் சீட்டு வழங்குதல், நான் முதல் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து கடந்த 2௦ ஆம் தேதி நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் குடும்பத் தலைவிகளுக்கு வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் ரூ 1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் இரண்டு கோடியே 33 லட்சம் ரேஷன் கார்டு அட்டைதாரர்கள் உள்ளனர். அரசின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப யார் யார் ரூ 1000 பெற தகுதியுடையவர்கள் என்பதனை மகளிர் மேம்பாட்டு துறையினர் முடிவு செய்து பட்டியல் வழங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வருவாய்த்துறையினரும் மகளிர் மேம்பாட்டுத்துறையினரும் இந்த பணத்தை பெற தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகள் பட்டியலை தயார் செய்து வருகின்றார்கள்.
அரசு ஊழியர்கள் வருமான வரி கட்டுபவர்கள், அரசின் உதவித்தொகையை முன்னதாகவே பெருபவர்கள் இந்த உதவி தொகையைப் பெற முடியாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தினர் விதவைகள், முதியோர் உதவி தொகை கிடைக்க பெறாதவர்கள் என சுமார் 80 ஆயிரம் பேர் தான் மாதம் ஆயிரம் உதவித்தொகை பெற தகுதியானவர்கள் என்ற பட்டியல் எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் இந்த பட்டியல் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் ஒப்புதலுக்கு பிறகு தான் யார் யார் தகுதியானவர்கள் ரூ 1000 பெற யார் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.