நடிகர் விஜய்-இன் தமிழக வெற்றிக் கழகம் முதல் மாநில மாநாடு, விக்கிரவாண்டி, வி-சாலை -யில் நேற்று நடைபெற்றது. விஜய் அரசியலுக்கு வந்தால் அவரது கொள்ளை, கோட்பாட்டுகள் என்ன?, அவரது கட்சியின் கொள்கை தலைவர்கள் யார்?, அவர் கையில் எடுக்கும் அரசியல் நோக்கம் என்ன? என்ற கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக , தவெக தலைவர் விஜய், அனல் பறக்க நேற்றைய மாநாட்டில் பேசியிருந்தார்.
மாநாட்டில் அவர் பேசியதாவது, “திராவிட மாடல் -னு சொல்லிக்கிட்டு தந்தை பெரியார், அண்ணாவின் பெயரை வைத்து தமிழ்நாட்டை சொரண்டி கொல்லையாடிக்கற குடும்ப சுயநல கூட்டம் தான் நம்மளோட அடுத்த அரசியல் முதல் எதிரி, கொள்கை கோட்பாட்டு அடிப்படையில் நாம் திராவிடத்தையும் , தமிழ் தேசியத்தையும் நாம் பிரித்து பக்க போறது இல்ல, திராவிடமும் தமிழ் தேசியமும் இந்த மண்ணின் இரண்டு கண்கள் என்னுடைய தாழ்மையான கருத்து, எந்த ஒரு அடையாளத்திலும் நம்மை சுருக்கு கொள்ளாமல், தமிழ் நாட்டுக்கான உரிமைகள் சார்ந்து, இந்த மண்ணுக்கான மதச்சார்பற்ற சமூக நீதி கொள்கைகள் secular social justice ideology நமது கொள்கை அடையாளமாக செயல் பட வேண்டும்”, பேசியிருக்கிறார்.
இவரின் திராவிட மாடலை நேரடிய எதிர்த்து பேசியிருப்பது சமூக பொதுவெளியில் விவாத பொருளாக மாறியுள்ளது.