வெள்ளை மற்றும் பிங்க் நிறத்தில் வளரும் முள்ளங்கி சாம்பார்,சட்னி,வடை,பொரியல் போன்ற உணவுகள் தயாரிக்க பயன்படுகிறது.முள்ளங்கியில் வைட்டமின்கள்,புரதம்,கால்சியம்,இரும்பு,நார்ச்சத்து உள்ளிட்டவை நிறைந்து காணப்படுகிறது.முள்ளங்கி சாப்பிடுவதால் வாயுத் தொல்லை,மலச்சிக்கல்,செரிமானப் பிரச்சனை போன்றவை குணமாகும்.
டயட் இருப்பவர்கள் முள்ளங்கியை சாலட் செய்து சாப்பிடலாம்.சிலர் முள்ளங்கியில் இருந்து வரும் வாசனையை விரும்பமாட்டார்கள்.இதனால் முள்ளங்கியை கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுகளை சாப்பிடமாட்டார்கள்.
ஆனால் அதன் ஆரோக்கிய நன்மைகள் தெரிந்தால் நிச்சயம் முள்ளங்கியை இனி தவிர்க்க மாட்டீர்கள்.இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் கொண்டிருக்கும் முள்ளங்கியை சில உணவுகளுடன் சேர்த்து சாப்பிட்டால் அது விஷமாக மாறிவிடும்.அதேபோல் சிலர் முள்ளங்கியை உட்கொண்டால் அது உடலில் கடுமையான பக்கவிளைவுகளை உண்டாக்கிவிடும்.
முள்ளங்கியை யார் உட்கொள்ள கூடாது?
1)சிறுநீரகம் தொடர்பான பாதிப்புகளால் அவதியடைந்து வருபவர்கள் முள்ளங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
2)சர்க்கரை நோயாளிகள் முள்ளங்கி சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.இது இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்துவிடும்.
3)கர்ப்பிணி பெண்கள்,பாலூட்டும் தாய்மார்கள் முள்ளங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
4)தைராய்டு பாதிப்பு இருப்பவர்கள் முள்ளங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.இது தைராய்டு சுரப்பியை செயலிழக்கச் செய்துவிடும்.
5)குடல் சார்ந்த பாதிப்புகளால் அவதியடைந்து வருபவர்கள் முள்ளங்கி சாப்பிடக் கூடாது.