‘முத்துப்பேட்டை சோமையா தேவர் பாஸ்கர் என்பவர் தமிழ் சினிமா நடிகரும், பின்னணி குரல் கொடுப்பவரும்’ ஆவார். இவர் முதலில் ”விசுவின் ‘திருமதி ஒரு வெகுமதி’ என்ற படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தின் மூலம் வெள்ளித் திரையில் அறிமுகமானார்”. சின்னத்திரையில் ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா, செல்வி’ போன்ற நாடகங்களில் நடித்தார்.
“எங்கள் அண்ணா, மொழி, சிவகாசி ஆகிய படங்களில் குண சித்திர வேடங்களில் நடித்துள்ளார்”. இவர் ‘மொழி’ திரைப்படத்திற்காக ‘சிறந்த குணசித்திர நடிகர்’ விருது பெற்றவர்.இவர் ‘ஆயுள் காப்பீட்டு முகவராகவும், பற்பசை நிறுவனத்தில் விற்பனையாளராகவும் பணிபுரிந்துள்ளார்’.
“ஒரு முறை இவரிடம் சுகர் மாத்திரை வாங்கித் தர காசு தாருங்கள் என கேட்டவருக்கு, இவர் இரக்க அடிப்படையில் பணம் வழங்கியுள்ளார்”. அப்பணத்தை வாங்கி அந்நபர், ‘டாஸ்மாக் சென்று குடித்து வீணாக செலவழித்துள்ளார்’. அதிலிருந்து உதவி என்று கேட்டு, வருபவர்கள் ‘யாருக்கும் நான் உதவ மாட்டேன்’. “பசிக்கிறது என்று காசு கேட்கிறார்களா, வாங்க சாப்பாடு வாங்கி தரேன் என அழைத்து சென்று விடுவேன். மருத்துவம் என்று காசு கேட்டாலும் மெடிக்கல் ஷாப் சென்று மருந்து வாங்கி தருவேன். ஸ்கூல் பீஸ் கட்ட வேண்டும் என்றாலும் நானே சென்று கட்டி விடுவேன்”. ஆனால் நீங்கள் செய்ய வேண்டாம், நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் ‘காசு தாருங்கள்’ என கேட்டால் நான் தரமாட்டேன் என்றார்.
இதனால் என்னை “கஞ்சன்” என்றும் பகலகுபவர்கள் கூறுவது உண்டு. ‘சொன்னால் சொல்லிட்டு போகட்டும்’. அதைப் பற்றி “எனக்கு ஒன்னும் கவலை இல்லை”.என கூறியுள்ளார்.