SBI வங்கியில் கொரோனா 5 லட்சம் கடனுக்கு இவர்களும் விண்ணப்பிக்கலாம்!

0
102

கொரோனா நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எஸ்பிஐ மாபெரும் உதவியாக 5 லட்சம் வரை கடன் வழங்கும் திட்டத்தை உருவாக்கியது.
கொரோனா நோய் தொற்று பரவ ஆரம்பித்த பிறகு மருத்துவ செலவுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே சென்றது. ஆக்சிசன் படுக்கை இல்லாமல் அரசு மருத்துவமனைகளில் வெளியே ஆம்புலன்ஸில் இருந்து சிகிச்சை பெறும் மக்களை எவ்வளவு நாம் பார்த்திருப்போம்.

அதில் பாதிப்பேர் தனியார் மருத்துவமனைக்கு சென்றால் செலவுகள் அதிகமாகும் என்பதற்காக அரசு மருத்துவமனையை நாடி வரும் மக்கள் உள்ளனர். இதை கருத்தில் கொண்டுதான் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பயன்படும் வகையில் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ கொரோனா சிகிச்சைக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்குகிறது. இதற்கு கவாச் பர்சனல் லோன் என்ற பெயரும் சூட்டி உள்ளது.

கவாச் பர்சனல் லோன் மூலமாக ஒரு தனிநபர் இத்திட்டத்தின் மூலம் மருத்துவ செலவுக்காக அதிகபட்சம் 5 லட்சம் வரை கடன் பெறலாம். ஒரு குறைந்தபட்ச கடன் தொகையாக 25 ஆயிரம் வரை பெறலாம். இதற்கு வட்டி விகிதம் 8.5 சதவீதம் என்று நிர்ணயித்துள்ளது. மேலும் இதை திருப்பி செலுத்துவதற்கு 5 ஆண்டுகள் கால நீட்டிப்பையும் கொடுத்துள்ளது.

இந்த திட்டம் குறித்து எஸ்பிஐ தலைவர் தினேஷ் குமார் கார கூறியது, இந்த கொரோனா நெருக்கடியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ எஸ்பிஐ கவாச் தனிநபர் கடன், இந்த திட்டத்தை அறிமுகப் படுத்துவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். கொரோனா சிகிச்சை தொடர்பாக செலவுகள் மற்றும் எவ்வித இடையூறும் இல்லாமல் மக்கள் உயிர் காக்கும் வகையில் இந்தத் திட்டம் மக்களுக்கு உதவும் என நம்புகிறோம். இது தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கான சிகிச்சைக்கான செலவை ஈடுசெய்யும் வகையில் அமையும் என்று நம்புகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே செலவிடப்பட்ட மருத்துவ செலவுகளை செலுத்தவும் இந்தக் கடனுக்காக விண்ணப்பிக்கலாம் என்று எஸ்பிஐ தெரிவித்துள்ளது.

எஸ்பிஐ கவாச் தனிநபர் கடன் திட்டத்திற்கு சம்பளதாரர்கள், சம்பளம் பெறாதவர்கள், சுயதொழில் செய்பவர்கள், ஓய்வூதியதாரர்கள், உள்ளிட்ட நபர்கள் தகுதி பெறுவார்கள், தனிநபர் கடன் பெற்றவர்கள் ஆன்லைன் மூலம் கடனுக்கு விண்ணப்பிக்கலாம். என தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப நிதி வகையில் உதவுவதற்காக நாங்கள் முயற்சித்து வருகிறோம் என்று எஸ்பிஐ தலைவர் கூறினார்.