Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திருட வந்த இடத்தில் அயர்ந்து உறங்கிய கொள்னையன்! அலேக்காகத் தூக்கிய காவல்துறை!

மதுரை அவனியாபுரத்திற்கு செல்லும் சாலையில் அமைந்திருக்கிறது பராசக்தி நகர் இந்த பகுதியைச் சேர்ந்த ரத்தினவேல் என்பவருக்கு திருமணம் ஆகி ஒரு மகள் இருக்கிறார். இந்த நிலையில், மனைவியும் மற்றும் மகள் உள்ளிட்டோர் வெளியூர் சென்றிருந்த நிலையில், ரத்தினவேல் வீட்டில் தனியாக இருந்திருக்கிறார்.

அதோடு நேற்று வேலைக்குச் சென்ற ரத்தினவேல் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவுகள் உடைக்கப்பட்டிருந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக உள்ளே சென்று பார்த்த போது வீட்டினறையில் ஒரு மர்ம நபர் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தார்.

அந்த நபர் பார்ப்பதற்கு திருடனை போல காட்சியளித்ததால் அவரை உள்ளே வைத்துக் பூட்டி ரத்தினவேல் உடனடியாக அவனியாபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் வழங்கினார்.

இந்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அந்த நபரை பிடித்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்து வந்தார்கள்.

காவல்துறையினரின் விசாரணையில் அந்த இளைஞர் மதுரை பழங்காநத்தம் பகுதியில் சேர்ந்த நடராஜன் என்பதும். கொள்ளையடிக்க வந்த இடத்தில் அயர்ந்து உறங்கியதும், தெரிய வந்தது.

இந்த நிலையில், அவரை கைது செய்த காவல் துறையினர் இந்த கொள்ளை சம்பவத்தில் வேறு யாரும் தொடர்பு கொண்டிருக்கிறார்களா? என்பது தொடர்பாக விசாரணை செய்து வருகிறார்கள்.

Exit mobile version