Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இது உங்கள் வீடு எனத் தெரியாது!வீட்டுச் சுவற்றில் திருடனின் மன்னிப்புக் கடிதம்

இது உங்கள் வீடு எனத் தெரியாது!வீட்டுச் சுவற்றில் திருடனின் மன்னிப்புக் கடிதம்

கேரளாவில் ஒரு வீட்டுக்குத் திருடப்போன திருடன் பொருட்கள் எதையும் எடுக்காமல் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருவாங்குளம் பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு நள்ளிரவில் திருடப் புகுந்துள்ளார் ஒரு திருடன். பூட்டியிருந்த வீட்டை உடைத்து உள்ளே கனக்கசித்தமாக உள்ளே சென்ற அவர் வீட்டை நோட்டம் விட்டுள்ளார். அப்போது அதிர்ச்சியளிக்கும் விதமாக சில புகைப்படங்களைப் பார்த்துள்ளார். ராணுவ உடையில் அந்த வீட்டின் உரிமையாளர் இருப்பதைப் பார்த்த அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதனால் பயந்து போன திருடன் அந்த வீட்டில் இருந்து எந்த ஒரு பொருளையும் திருடாமல் சென்றுள்ளான். அத்துடன் வீட்டு சுவற்றில் ‘இந்த வீடு ராணுவ வீரரின் வீடு என தெரியாமல் உள்ளே நுழைந்து விட்டேன். பைபிளின் ஏழாவது கட்டளையை மீறி தவறு செய்து விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்’ என எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளான்.

இதையடுத்து வீட்டு உரிமையாளர் வந்து அதைப் பார்த்த பின்பு போலீஸாருக்குத் தகவல் சொல்லியுள்ளார். இதைப் பார்த்த பொலிஸார் அந்த திருடனைப் பிடிக்க விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version