உணவு சாப்பிட்ட பிறகு செய்யக்கூடாத முக்கியமான விஷயங்களை பற்றி இங்கு அறிந்து கொள்ளுங்கள்!
ஒவ்வொரு நாளும் உடல் சக்திக்காக நாம் மூன்று வேளை உணவை உட்கொள்கிறோம். இதனால் நம் உடல் பலம் பெற்று நம்மை சீராக வைக்கிறது. உணவை செரிப்பதில் நமது உடலுக்கென்று இயற்கையான சில விதிகள் உண்டு, அதை நாம் சரியாக பின்பற்ற வேண்டும். சிலர் சாப்பிட்ட பிறகு செய்யக் கூடாத செயல்களை செய்வதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு நோயாளியாகின்றனர். சாப்பிட்ட பின் செய்யக்கூடாத சில விஷயங்களை கீழே காணலாம்.
சாப்பிட்ட பிறகு செய்யக்கூடாத செயல்கள் : Things Not To Do After Eating
- திட உணவுகளை சாப்பிட்ட உடனே டீ, காபி, பால், மோர் போன்ற திரவ உணவுகளை சாப்பிட கூடாது. அப்படி சாப்பிட்டால் செரிமானம் தடுக்கப்பட்டு வாயுத் தொல்லை அல்லது வயிற்றுப் பிரச்சினை அதிகரிக்கும்.
- உணவுக்கு முன்பு உடற்பயிற்சி செய்வதே சிறந்தது. உணவுக்கு பின் உடற்பயிற்சி செய்தால் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் பாதிக்கப்படும்.
- சாப்பாட்டிற்கு பின் புகை பிடிப்பது மிகத்தவறு.இதனை செய்தால் மூச்சுத் திணறல் வரலாம்.
- எப்போதுமே உணவிற்கு பின் மது அருந்துதல் கூடாது. மது அருந்தினால் சாப்பிட்ட உணவு புட் பாய்சனாக மாறும், அதே சமயம் உங்கள் உடல்நிலை கடுமையாக பாதிக்கலாம்.
- இரவு நேரத்தில் சாப்பிட்ட உடன் வாழைப்பழம் அல்லது மற்ற பழங்களை சாப்பிடுவதை பலர் வழக்கமாக வைத்துள்ளார்கள். சாப்பிட்ட உடனே பழங்களை உண்ணுவதால் காற்றானது வயிற்றுக்குள் சென்று வயிற்றை உப்பும் (உப்புசம்) நிலைக்கு தள்ளுகிறது. உணவுக்கு பின் 30 அல்லது 40 நிமிடங்கள் கழித்து பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.
- சாப்பிட்ட பின் குளித்தால் உடலில் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் ரத்த ஓட்டம் அதிகரித்து இயல்புக்கு மாறான செயல்பாடுகள் ஏற்பட்டு ஒரு வித மந்தமான நிலை உண்டாகும்.
- செரிமானம் ஆக வேண்டும் என்பதற்காக சாப்பிட்ட உடனே நடக்க வேண்டாம். நமது உணவு மண்டலம் போதுமான சத்துக்களை எடுக்க 10 லிருந்து 20 நிமிட கால அவகாசம் தேவை.
- மதியம் அல்லது இரவு வேளையில் சாப்பிட்ட பின் உடனே சிலர் நல்ல தூக்கத்தை போடுவர். இது மிகத் தவறான விஷயம், உடனடியாக தூங்கினால் செரிமானம் ஆகாமல் பல்வேறு நோய்களுக்கு வழி வகுத்துவிடும்.
குறிப்பு : செரிமானம் ஆகாதவர்கள் சாப்பிட்ட 20 நிமிடங்களுக்கு பிறகு, வெந்நீர் குடித்தால் விரைவில் செரிமானம் ஆகும்.