குல தெய்வம் நம் வீட்டில் இருப்பதை நமக்கு உணர்த்த கூடிய விஷயங்கள்!!
நம் குலத்தை காக்க கூடிய குலதெய்வத்தை வாழையடி வாழையாக நாம் வணங்கி வருகிறோம். இப்படிப்பட்ட குலதெய்வம் நம் வீட்டில் நம்முடன் இருக்கிறார்களா? என்பதை பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் நம்மில் பலருக்கும் இருக்கும்.
இதையும் தாண்டி நான் உன் வீட்டில் தான் இருக்கிறேன் என்பதை அந்த குலதெய்வமே எப்படி எல்லாம் நமக்கு உணர்த்தும் என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
தீபம்:
முதலில் பூஜை அறையில் நீங்கள் தீபம் ஏற்றும் பொழுது உங்கள் உங்கள் விளக்கு எப்பொழுதும் போல் இல்லாமல் மிகவும் கொளுத்து விட்டு உயர உயர எரிகிறது என்றால் அந்த தீபத்தை வளர்த்து கொண்டிருப்பது உங்கள் குலதெய்வமாகத் தான் இருக்கும்.
அதையும் தாண்டி அந்த தீபமானது வெள்ளை நிறத்திலோ அல்லது வயலட் நிறத்திலோ எரிகிறது என்றாலும் உங்கள் வீட்டில் குலதெய்வம் இருக்கிறது என்பதை நீங்கள் அறைந்து கொள்ளலாம்.
பல்லி சத்தமிடுதல்:
உங்கள் வீட்டு பூஜை அறையில் பல்லிகள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கிறது என்றால் அந்த இடத்தில் இறை சக்தி அதாவது குலதெய்வத்தின் சக்தி அதிகமாக இருக்கிறது என்று அர்த்தம்.
அதேபோல் உங்கள் வீட்டில் இறை நடமாட்டம் இருக்கிறது என்றால் பல்லி சத்தமிட்டு கொண்டே இருக்கும். இதுவே உங்கள் வீட்டில் குலதெய்வம் இருக்கிறதா? இல்லையா? என்பதை காட்டி கொடுத்து விடும்.
நறுமணம்:
உங்கள் வீட்டில் திடீரென்று நறுமணம் வருதல். ஆம், வீட்டில் சந்தனத்தின் நறுமணம், விபூதியின் நறுமணம், பூவின் வாசம் இந்த வாசனைகள் எல்லாம் உங்கள் வீட்டில் தீடிரென்று வந்தால் உங்கள் வீட்டில் குல தெய்வம் நடமாட்டம் இருக்கிறது என்று அர்த்தம்.
சுருட்டு வாசனை:
சில குடும்பத்தினருக்கு கருப்பன், அய்யனார், முனியப்பன் போன்ற ஆண் தெய்வங்கள் குலதெய்வமாக இருக்கும். இந்த தெய்வங்களுக்கு எல்லாம் சுருட்டு பிடித்த பொருள் ஆகும்.
நம் வீட்டில் சம்மந்தமே இல்லாமல் தீடிரென்று சுருட்டு வாசனை வருவதை நீங்கள் உணர்கிறீர்கள் என்றால் உங்கள் குல தெய்வத்தின் நடமாட்டம் உங்கள் வீட்டில் இருக்கிறது என்று அர்த்தம்.
கோயில் எலுமிச்சம் பழம்:
நீங்கள் கோயிலுக்கு சென்று வரும் போது அங்கு கொடுக்கப்படும் எலுமிச்சம் பழத்தை வாங்கி வந்து உங்கள் வீட்டு நிலை வாசல் அல்லது பூஜை அறையில் வைக்க வேண்டும்.
அப்படி வைக்கப்பட்ட எலுமிச்சம் பழம் நாட்கள் செல்ல செல்ல சுருங்கி காய்ந்து போகிறது என்றால் உங்கள் வீட்டில் குலதெய்வத்தின் நடமாட்டம் இருக்கிறது என்று அர்த்தம். ஆனால் அந்த எலுமிச்சம் பழம் அழுகிப் போனால் உங்கள் வீட்டில் துளி அளவு கூட குல தெய்வ நடமாட்டம் இல்லை என்று அர்த்தம்.
காகம் கரைதல்:
உங்கள் வீட்டிற்கு வரும் காகத்திற்கு நீங்கள் சாப்பாடு வைக்கும் பொழுது அதை சாப்பிட்டு விட்டு அந்த காகம் உங்கள் வீட்டையே சுற்றி சுற்றி கரைந்து கொண்டே இருக்கும். அப்படி செய்தால் உங்கள் வீட்டில் குல தெய்வ நடமாட்டம் இருக்கிறது என்று அர்த்தம்.