Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

செல்வம் பெருக.. வீட்டில் மேற்கொள்ள வேண்டிய விஷயங்கள்..!!

#image_title

செல்வம் பெருக.. வீட்டில் மேற்கொள்ள வேண்டிய விஷயங்கள்..!!

செல்வம் மற்றும் சகல ஐஸ்வர்யங்களின் கடவுள் மகாலட்சுமி. இந்த தேவியின் அனுகிரகங்களைப் பெற, வீட்டில் சில நல்ல நடத்தைகளை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு நடந்தால் தேவி மகிழ்ந்து எல்லா வளங்களையும் தருவாள் என்பது நம்பிக்கை.

அந்த நல்ல பழக்கங்கள் என்னென்ன என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்…

*சூரிய உதயத்திற்கு முன்னால் விழித்து, படுக்கையில் இருந்து எழுந்து விடுங்கள்.

*இரவில் வீட்டைப் பெருக்கி குப்பைகளை வெளியே வாரி வீசக் கூடாது.

*கர்ப்பிணிகள் தேங்காய் உடைத்தல் ஆகாது.

*காலால் இன்னொரு காலை தேய்த்து கழுவக் கூடாது.

*உணவுப் பொருட்களை கையால் வாரி பரிமாறக் கூடாது.

*மாலை நேரத்தில் படுக்கக் கூடாது.

*மாலை நேரத்தில் வயிறு நிறைய உணவு உண்ணுதல் கூடாது.

*பெண்கள் கவிழ்ந்து கிடந்து தூங்கக் கூடாது.

*திருமணமான பெண்களின் நெற்றியில் எப்பொழுதும் பொட்டு இருக்க வேண்டும்.

*வீட்டில் விருந்தினர்கள் இருக்கும் பொழுது அவர்களுக்கு உணவு வழங்கும் முன்பே வீட்டில் உள்ளவர்கள் உணவு சாப்பிடக் கூடாது.

*வடக்கே தலை வைத்து தூங்கக் கூடாது.

Exit mobile version