இந்த காலகட்டத்தில் திருமணமான தம்பதிகள் பலர் குழந்தையின்மை பிரச்சனையை எதிர்கொண்டு வருகின்றனர்.தம்பதிகளின் உடலில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் குழந்தை பெற்றுக் கொள்வதில் தாமதம் ஏற்படும்.குழந்தையின்மை பிரச்சனை அதிகரித்து வரும் அதே நேரத்தில் செயற்கை கருத்தரிப்பு மையமும் அதிகரித்து வருகிறது.கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் குறைவான அளவே கருத்தரிப்பு சிகிச்சை முறைகள் இருந்தன.ஆனால் தற்பொழுது அதி நவீன கருத்தரிப்பு சிகிச்சை முறைகள் மூலம் எளிதில் குழந்தையின்மை பிரச்சனைக்கு தீர்வு காண முடிகிறது.
இதை இன் விட்ரோ முறை அதாவது ஆங்கிலத்தில் in vitro fertilization சுருக்கமாக IVF என்று அழைக்கிறார்கள்.இந்த கருத்தரித்தல் முறையால் பலருக்கும் செயற்கையான முறையில் குழந்தை பிறப்பு ஏறடுகிறது.இந்த கருத்தரித்தல் மூலம் தம்பதிகளின் பெற்றோர் கனவு நிறைவேறுகிறது.
இந்த IVF ஐந்து முக்கிய செயல்முறைகள் இதோ:
*முதலில் பெண்களின் கருப்பையில் ஹார்மோன் ஊசி செலுத்தப்படுகிறது.இதன் மூலம் ஆரோக்கியமான தரமான முட்டைகளின் வளர்ச்சி தூண்டப்படும்.இந்த IVF முறையால் தரமான மற்றும் அதிகமான கருமுட்டை உற்பத்தி செய்யப்படுகிறது.இந்த சிகிச்சை மூலம் 15 முட்டைகள் வரை உருவாக்கப்படுகிறது.
*பிறகு அறுவை சிகிச்சை மூலம் கருப்பையில் உள்ள முட்டைகள் மீட்டு எடுக்கப்படுகிறது.அதே சமயத்தில் கணவரிடம் இருந்து விந்து சேகரிக்கப்படுகிறது.
*பிறகு ஆய்வகத்தில் இந்த கருமுட்டை மற்றும் விந்து நவீன தொழில்நுட்பம் மூலம் இணைக்கப்படுகிறது.
*இதனால் கருப்பையில் உயிரணுக்கள் பிரிந்து வளர்ச்சிஅடையும்.இது கரு உருவாவதற்கு நல்ல முன்னேற்றம் ஆகும்.
*பிறகு கருப்பை அல்ட்ராசவுண்ட் மூலம் கருப்பை வாய் வழியாக பெண்ணின் உடலில் கருக்கள் வைக்கப்படுகிறது.10 நாட்களுக்கு பிறகு பெண்ணின் கரு சோதனை செய்யப்படுகிறது.
இந்த IVF சிகிச்சை பெறும் தம்பதிகளுக்கு முதல் முயற்சியில் வெற்றி கிடைக்கும் என்று சொல்லமுடியாது.இரண்டு மூன்று முறைக்கு பின்னர் கூட வெற்றியடையலாம்.ஆனால் இந்த சிகைச்சையை பெற உள்ள தம்பதிகளுக்கு பொறுமை,நேரம் மிகவும் அவசியமானவை ஆகும்.