கோயிலுக்கு போகும் முன் தெரிந்து கொள்ள வேண்டியவை!! இனிமேல் இந்த தவறை செய்யாதீர்கள்!!

0
103
#image_title

கோயிலுக்கு போகும் முன் தெரிந்து கொள்ள வேண்டியவை!! இனிமேல் இந்த தவறை செய்யாதீர்கள்!!

1)கொடி மரம், நந்தி, பலிபீடம் ஆகியவற்றின் நிழல்களை மிதிக்கக் கூடாது.

2)அபிஷேகம் நடக்கும் பொழுது கோயிலை சுற்றி வரக் கூடாது.

3)எந்த மனிதர்கள் காலிலும் கோயிலுக்குள் இருக்கும் போது விழக் கூடாது.

4)கோயில் படிகளில் உட்காரக் கூடாது. கோயிலில் தூங்கக் கூடாது.

5)கோயிலுக்குள்ளே போவதற்கு முன் தர்மம் செய்யலாம். வெளியே வந்து செய்ய கூடாது.

6)விளக்கு எரியாமல் இருக்கும் போது கர்ப்பகிரகத்தை வணங்கக் கூடாது.

7)மற்றவர் ஏற்றிய மண் அகலின் நாமும் விளக்கு ஏற்றக் கூடாது.

8)நம் கையில் விளக்கு ஏந்தி ஆராதனை காட்டக் கூடாது.

9)கோவிலில் நந்தி மற்றும் எந்த மூர்த்திகளையும் தொட்டு வணங்க கூடாது.

10)தாம்பூலம் தரித்துக் கொண்டு கோவிலுக்கு செல்லக்கூடாது.

11)கிரகணம் இருக்கும் போது அந்த வழியாய் போனால் வெளியில் நின்று கூட வணங்கக் கூடாது.

12)புண்ணிய தீர்த்தங்களுக்கு சென்றவுடன் முதலில் காலை வைக்காமல் தலையில் நீர் தெளித்து பின் கால்களை கழுவவும்.

13)கோயிலுக்கு சென்று வீடு திரும்பிய உடன் கை கால்களை கழுவக் கூடாது.