Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சாஸ்திரப்படி பெண்கள் செய்யக் கூடாத விஷயங்கள்!! என்னவென்று தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்!!

#image_title

சாஸ்திரப்படி பெண்கள் செய்யக் கூடாத விஷயங்கள்!! என்னவென்று தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்!!

கோயிலுக்கு செல்லும் பெண்கள் கருப்பு நிற உடை அணிவதை தவிர்க்கவும்.திருமணம் ஆன பெண்கள் வெள்ளை நிற உடை அணிவதை தவிர்க்கவும்.மஞ்சள்,சிவப்பு,பச்சை நிற உடை அணிவது மங்களகரமாக இருக்கும்.

பெண்களே நீங்கள் கர்ப்பமாக இருக்கும் பொழுது உங்கள் கணவர் சிதறு தேங்காய் உடைக்கக் கூடாது.

திருமணம் ஆன பெண்கள் நெற்றியில் அவசியம் குங்குமம் வைக்க வேண்டும்.அதுவும் தங்களது மோதிர விரலை பயன்படுத்தி குங்குமத்தை இட்டுக் கொள்ள வேண்டும்.

பெண்கள்,அர்ச்சனை பொருட்கள் மற்றும் குங்குமத்தை இடது கையில் வாங்கக் கூடாது.

பெண்கள் தங்களின் மாதவிடாய் காலத்தில் தலைக்கு பூ வைப்பதை தவிர்க்க வேண்டும்.பூஜை பொருட்களை ஒருபோதும் தொட்டு விடாதீர்கள்.

செவ்வாய் மற்றும் வெள்ளி அன்று உங்கள் இல்லத்தை துடைக்க கூடாது.இவ்வாறு செய்தால் தீராத பணக் கஷ்டம் ஏற்படும்.

திருமணம் ஆன பெண்கள் கையில் வளையல் அணியாமல் பூஜை அறைக்குள் செல்லக் கூடாது.அதேபோல் நன்னாளில் வீட்டு வாசலில் சாணம் தெளித்து கோலம் போட மறக்கக் கூடாது.

Exit mobile version