திருப்பூர் மாவட்டம் அருகே காத்து வாங்க வந்தவர்களிடம் வழிப்பறி? இருவர் கைது!!
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதி ஒன்றுள்ளது. நெருங்கிய தோழர்களான சுராஜ் ராம் மற்றும் சதீஷ் ஆகிய இருவரும் காற்று வாங்க வெளியில் நடந்து சென்றுள்ளார்கள். அப்போது அவ்வழியாக வந்த இரண்டு மர்ம நபர்கள் சுராஜ் ராம் நீ எந்த ஊர் என்று கேட்டுள்ளனர்.
பேச்சுவாக்கில் அவரை தனியாக அழைத்து உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும் என்று அங்கிருந்து அழைத்துச் சென்றார். அப்போது திடீரென்று சட்டை பையில் இருந்த போனை எடுத்துக்கொண்டு மீண்டும் அவர் சட்டை பையில் இருந்த 550 ரூபாய் பணத்தை எடுக்க முயற்சிக்கும்போது அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வருவதை பார்த்தவுடன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இதனையடுத்து மடத்துக்குளம் காவல் நிலையத்தில் சுராஜ் ராம் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த சுப்ரமணி அவர்களின் மகன் ஜெயப்பிரகாஷ் மற்றும் காளிமுத்து ஆகிய இருவரும் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து காவல்துறையினர் அவர்களிடமிருந்து 550 ரூபாய் பணமும் மற்றும் செல்போனையும் பறிமுதல் செய்துவழிப்பறியில் ஈடுபட்டவர்களை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.