Tiruchendur: கடல் அரிப்பால் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கடற்கரை பாதிக்கப்பட்டு இருக்கிறது.
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் மிக முக்கியமான இடம் திருச்செந்தூர். இந்த கோவிலுக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். விசேஷ நாட்களில் பக்தர்கள் தங்களது குடும்பத்துடன் திருச்செந்தூர் கடலில் நீராடி வழிபடுவது உண்டு. பௌர்ணமி நாட்களில் திருச்செந்தூர் கடற்கரையில் இரவு முழுவதும் தங்குவார்கள்.
கோவிலுக்கு முன் பகுதியில் கடற்கரைக்கு செல்லும் படிக்கட்டுகள் மண் அரிப்பால் மிகவும் சேதமடைந்து இருக்கிறது. அதாவது, 20 அகலத்திற்கும் 10 அளத்திற்கும் பள்ளம் ஏற்பட்டு இருக்கிறது. இதனை கண்டு பக்தர்கள் அச்சம் அடைந்து இருக்கிறார்கள். இது போன்ற மண் அரிப்பு பாதிப்பு இரண்டு மாதங்களுக்கு முன் சந்தோஷ மண்டபம் மற்றும் அய்யா வைகுண்டர் அவதார பதி பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு இருந்தது.
அதை தமிழக அரசு சீர் செய்து. ஆனால் அதை விட தற்போது ஏற்பட்டு உள்ள மண் அரிப்பு என்பது மிகப் பெரிய அளவில் உள்ளது. இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்து இருக்கிறார்கள். மேலும், கடல் நீரானது கருமை நிறமாக மாறி இருக்கிறது. எனவே கடல் நீரில் பக்தர்கள் இறங்குவதற்கு அச்சம் கொண்டு உள்ளார்கள். கடல் நீரில் புனித நீராட எதுவாக கடலில் இறங்க வழிவகை செய்ய வேண்டும்.
திருச்செந்தூர் கடல் கருமை நிறமாக மாறி இருந்தால் கடலில் இறங்க பக்தர்கள் சற்று தயங்குவதாக தெரிய வந்துள்ளது. தற்போது பருவ மழை முடிவடைந்துள்ளது காற்றின் திசை மாற்றம் காரணமாக கடலில் உள்ள அடி மண் மேலே எழும்புகிறது இதனால் கடல் நீர் கருமையாக மாறி இருக்கிறது என தகவல் வெளியாகி இருக்கிறது.