Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திரும்பத் திரும்ப பேசுற நீ! அமைச்சரின் செயலால் கடுப்பான முதல்வர்!

திருக்குறளை எழுதியது யார் என்று தெரிவித்து மறுபடியும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.

ஜெயலலிதா உயிருடன் இருந்த சமயத்தில் பெயர் கூட தெரியாத அளவிற்கு அமைதியாக இருந்த மந்திரிகள், அவருடைய மரணத்திற்கு பிறகு தங்களுடைய சர்ச்சை பேச்சுகள் மூலமாக சமூக வலைத்தளங்களுக்கும், ஊடகங்களுக்கும், பேசுபொருளாக இருந்து வருகிறார்கள். இந்த நிலையில் , சர்ச்சையையும் இவரையும் பிரிக்கவே இயலாது என்ற அளவிற்கு மிகவும் முக்கியமானவர் மூத்த அமைச்சரான திண்டுக்கல் சீனிவாசன்.

மருத்துவமனையில் இருந்தபோது அம்மா இட்லி சாப்பிட்டார் என்று நாங்கள் பொய் உரைத்தோம் என்று இவர் தெரிவித்த கருத்து முதன்முதலாக சர்ச்சையாக வெடித்தது. அதன்பின்னர் இவர் எங்கே பேசினாலும் அங்கே ஊடகங்கள் ஒன்று கூட தொடங்கிவிட்டன. அம்மா கொள்ளையடித்த பணத்தை தினகரன் செலவு செய்து கொண்டு இருக்கின்றார். போன்ற கருத்துக்கள் முதல் ஏசுநாதரை கோட்சேதான் சுட்டுக் கொன்றார் என்று சமீபத்தில் தெரிவித்தது வரை, இவர் பேசிய அனைத்தும் சர்ச்சையின் ரகமாக தான் இருக்கிறது.

நிலைமை இவ்வாறு இருக்கையில், மறுபடியும் ஒரு முறை தன்னுடைய சர்ச்சை பேச்சின் மூலமாக ஊடகங்களுக்கும் சமூக வலைதளங்களுக்கும் தீனி போட்டிருக்கிறார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். திண்டுக்கல்லில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் உரையாற்றிய அவர் நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை என்ற திருக்குறளை சுட்டிக்காட்டி அரசர்களை நம்பி அவ்வையார் இந்த பாடலை பாடி இருப்பதாக தெரிவித்தார்.

அதன் பிறகு இதை யார் எழுதியது என்பது நமக்கு தேவையில்லை. கருத்து சரியாக இருக்கிறதா என்று தான் பார்க்க வேண்டும் என தெரிவித்து மழையை பற்றிய தன்னுடைய உரையாடலை தொடர்ந்தார். அவருடைய இந்த பேச்சும் இப்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாக மாறியிருக்கிறது.

Exit mobile version