Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தவெக விசிக.. எங்கள் கூட்டணியை பிரிக்க முடியாது!! யார் சதி திட்டமும் பழிக்காது- திருமா பளீச்!!

Thiruma has given an interview about the joining of Vithithi Siruthi Thaveka

Thiruma has given an interview about the joining of Vithithi Siruthi Thaveka

VSK TVK: திமுகவை தொடக்கப் பாதையாக ஆதவ் அர்ஜுனா கொண்டிருந்தாலும் அதில் உள்ள வேறுபாட்டினால் அதன் கூட்டணியிலேயே விடுதலை சிறுத்தையில் இணைந்தார். இருந்த போதும் நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட தொகுதி பிரிவு சலசலப்பு காரணமாக அடுத்த அடுத்த அவரது நோக்கமானது மாற ஆரம்பித்தது. அதன்படி திமுகவிற்கு எதிராக பேச ஆரம்பித்தார். அந்தவகையில், தற்பொழுது வந்த சினிமா நட்சத்திரம் துணை முதல்வராகும் போது  பல ஆண்டுகால அனுபவம் வாய்ந்தவர் முதல்வராக கூடாதா என்று கேள்வி எழுப்பி கூட்டணி கட்சிக்குள் விரிசலை ஏற்படுத்தினார்.

இதன் உச்சகட்டமாக விகடன் பிரசுரமும், இவரின் வாய்ஸ் ஆப் காமன்ஸ் நிறுவனமும் இணைந்து எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற நிகழ்ச்சியை நடத்தினர். இதில் விஜய் கலந்து கொண்ட பொழுது கட்டாயம் இவருடன் கூட்டணி வைக்கப் போகிறார் என்று பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. அதற்கேற்றார் போல் ஆதவ் அர்ஜூனாவும், மன்னர் பரம்பரை உருவாகுவதற்கு இனி ஒருபோதும் தமிழக மக்கள் இடம் கொடுக்கக் கூடாது, மன்னர் ஆட்சியை கட்டாயம் ஒழித்தே ஆக வேண்டும் அதேபோல இங்கு பிறப்பால் யாரும் முதலமைச்சர் ஆகக்கூடாது என்று ஆளும் கட்சியை கூட்டணியிலிருந்து கொண்டு மறைமுக சாடலில் பேசியுள்ளார்.

இது பூதாகரமாக வெடித்து கட்சியிலிருந்து இவரை இடைநீக்கம் செய்தனர். இந்த சூழலில் தான் ஆதவ் அர்ஜுனா தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். இதில் அவருக்கு பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இவருக்கு பதவி வழங்கியதும் உடனடியாக சென்று திருமாவளவனை சந்தித்தார்.இவர்களின் சந்திப்பானது அரசியல் களத்தில் இது அடுத்த கட்ட பரபரப்பை ஏற்படுத்தியது.

முன்னதாகவே விடுதலை சிறுத்தை கட்சியை தவெக இணைக்க முயற்சிப்பதாக பலரும் கூறிவரும் நிலையில் இந்த சந்திப்பானது அதனை வழிவகுக்கும் படியாக உள்ளது. அதுமட்டுமின்றி ஆதவ் அர்ஜூனா இவர்களின் கூட்டணி இணைக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறுகின்றனர். ஆனால், நேற்று திருமா அளித்த பேட்டியில், எந்த புது கட்சி வந்தாலும் யார் வந்தாலும் திமுக-வுடனான கூட்டணியை பிரிக்க முடியாது சதி திட்டமெல்லாம் பழிக்காது என தெரிவித்துள்ளார்.

Exit mobile version