Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திருமாவுக்கு ஆப்படித்த உயர்நீதிமன்றம்! அதிர்ச்சியின் உச்சத்தில் திருமாவளவன்!

இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை கிடையாது எனவும் இட ஒதுக்கீடு கொடுக்குமாறு அரசாங்கத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட இயலாது என்றும் உத்தரகாண்ட் மாநில உயர்நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதத்தில் வைத்திருக்கும் தீர்ப்பை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தாக்கல் செய்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வரும் 17ஆம் தேதி விசாரணைக்கு வர இருக்கின்றது.

இந்த நிலையில், இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை கிடையாதா? என அவர் ஆதங்கம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஒரு வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான உத்தரகாண்ட் உயர்நீதிமன்ற அமர்வு, இட ஒதுக்கீட்டை தகர்க்கும் வகையிலான ஒரு சில கருத்துக்களை தெரிவித்தது.

இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை கிடையாது எனவும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று எந்த ஒரு அரசாங்கத்திற்கும் நீதிமன்றம் உத்தரவிட இயலாது என்றும் இட ஒதுக்கீடு சரியாக முறைப்படுத்தப்பட்டு i இருக்கிறதா என்று அரசாங்கத்தை நீதிமன்றம் மூலமாக கேட்க இயலாது என்றும் அந்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இட ஒதுக்கீட்டினை மொத்தமாக புதைகுழிக்குள் தள்ளி விடுகிற இந்த தீர்ப்பை கொடுத்த நீதிபதி நாகேஸ்வரராவ் இப்போது பதவி உயர்வு அடைந்து உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக இருக்கின்றார்.

நீதிபதி நாகேஸ்வரராவ் தொடர்ச்சியாக இதே கருத்தைத்தான் தெரிவித்து வருகின்றார். இந்த தீர்ப்பை அனுமதித்தால், எதிர்காலத்தில் இட ஒதுக்கீடு என்பதே நீர்த்துப் போய்விடும் அதுமட்டுமின்றி இட ஒதுக்கீட்டை சரியாக நடைமுறைப்படுத்த மத்திய மாநில அரசுகளை எவரும் கேள்வி கேட்கவும் முடியாமல் போய்விடும்.

ஆகவே உத்தரகாண்ட் உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலேயே பார்த்தோமானால் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற எந்த கட்டாயமும் கிடையாது.

அது அரசாங்கமே செய்கின்ற ஒரு விஷயம் என்று ஆகிவிடும் இது நம்முடைய அரசியல் அமைப்பு சட்டம் கட்டிக்காத்து வரும் சமூக நீதி கோட்பாடுகளுக்கு எதிராக இருக்கிறது ஆகவே, தான் இந்த தீர்ப்பை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சி உச்சநீதிமன்றத்தில் இந்த மனுவை தொடுத்து இருக்கின்றது.

அந்த மனு இப்போதுதான் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது சமூக நீதியில் அக்கறை இருப்பவர்கள் இந்த மனுவில் தன்னையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என அவர் தெரிவித்திருக்கின்றார்.

Exit mobile version