பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக வெற்றிவேல் யாத்திரை நாளை நடைபெறுகிறது. என்று கூறி விறுவிறுப்பாக வேலைகளை செய்து வந்த நிலையில் அதற்கு தமிழக அரசு தடை விதித்து இருக்கின்றது.
இந்த யாத்திரையின் மூலமாக தமிழ்நாட்டில் அந்த கட்சி மத கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறது, என்றும் இதன் காரணமாக, அந்த யாத்திரைக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தமிழக டிஜிபி நேரில் பார்த்து கோரிக்கை வைத்து இருக்கின்றார்.
அதேபோல இந்த விஷயத்தை தமிழக முதல்வர் அவர்களுக்கு வேண்டுகோளாக வைத்திருக்கின்றார் திருமாவளவன்.
இந்த நிலையில், மாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டதை நான் வரவேற்கிறேன், என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். காங்கிரசின் யாத்திரை விவசாயிகளுக்கான நினைக்கிறேன் ஆனால் வெறுப்பு அரசியலை உண்டாக்கவே பாஜக யாத்திரை நடத்த முயற்சிக்கிறது.
அந்த யாத்திரைக்கு தடைவிதித்ததற்கு வரவேற்கின்றேன். எனவும் பாஜகவிற்கு தடை விதித்திருக்கும் நடவடிக்கை அதிமுக மற்றும் பாஜக இணக்கமாக இல்லை என்பதை கண்கூடாக காட்டுகின்றது என்று தெரிவித்திருக்கிறார்.