வேல் யாத்திரையைப் பற்றி விளக்கம் அளித்த திருமாவளவன்! அதிர்ச்சிக்குள்ளான ஆளும் தரப்பு!

0
138

பாஜக நடத்தவிருந்த கேலி யாத்திரைக்கு அனுமதி வழங்கப்போவதில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்திருக்கின்றது.இந்த முடிவை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக வரவேற்கின்றேன் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்திருக்கின்றார்.

நவம்பர் மாதம் ஆறாம் தேதி முதல் டிசம்பர் மாதம் ஆறாம் தேதி வரை ஒரு மாத காலத்திற்கு தமிழகத்தில் வேல் யாத்திரை நடத்தப்போவதாக பாரதிய ஜனதா கட்சி அறிவித்து இருந்தது.

இந்த நிலையில் நோய்த்தொற்றின் காரணமாக தமிழகம் முழுவதும் பொது முடக்கம் இன்னும் முழுமையாக தளர்த்தப்படாத காரணத்தால் அரசியல் நடவடிக்கைகளை தமிழக அரசு அனுமதிக்காது. என்று வேல் யாத்திரைக்கான தடையை அரசு அறிவித்து இருக்கின்றது.

இந்த யாத்திரைக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்பட பல அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்திருந்தனர்.

தமிழகத்தில் சென்ற ஒரு வருடத்தில் பல ஊர்களில் நடந்த பல்வேறு வன்முறை சம்பவங்களில் மத வன்முறையாக மாற்றுவதற்கு முயற்சித்தது என்று பல சம்பவங்களை குறிப்பிட்டு இதற்கு பல்வேறு எடுத்துக்காட்டுகள் கூறப்பட்டன.

பாஜகவின் உள் நோக்கம் என்னவென்றால், தமிழகத்தில் மதக்கலவரத்தை உண்டாக்கி அதன் மூலம் அரசியல் ஆதாயம் சுகத்தை தேடுவதுதான் என்பதையும் உணர்த்தி இருக்கிறார்கள்.

பல்வேறு விஷயங்களை எடுத்துக் காட்டி தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுப்பதற்காக, இந்த மாத்திரைக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

இந்த யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுக்குமானால், பாஜக சார்பாக மீண்டும் உச்சநீதிமன்றத்தின் கதவுகள் தட்டப்படலாம்.

ஆகவே அங்கே தமிழக அரசு தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் என்று திருமாவளவன் தெரிவித்திருக்கின்றார்.