Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திருமாவளவனை கதறவிட்ட அரவிந்த் கெஜ்ரிவால்!

பாஜகவுடன் போட்டி போடும் விதத்தில் ஆம் ஆத்மி கட்சி செயல்பட்டு வருகிறது. அந்த விதத்தில் டெல்லி மற்றும் பஞ்சாபில் ஆட்சியைப் பிடித்துள்ள ஆம் ஆத்மி
குஜராத்தில் களமிறங்கியுள்ளது. விரைவில் இமாச்சல பிரதேசம், குஜராத் உள்ளிட்ட சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் குஜராத்தில் ஆம் ஆத்மி தலைவரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், டெல்லியில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த சில மாதங்களாக இந்திய பொருளாதாரம் நல்ல நிலையில் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தோனேசியாவில் ரூபாய் நோட்டுகளில் ஒரு புறம் விநாயகர் உருவம் இருக்கிறது அது ஒரு முஸ்லிம் நாடு அந்த நாட்டில் 85 சதவீதத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் இருக்கிறார்கள். அவர்களால் அதனை செய்ய முடிந்தால் நாமும் அதனை செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளார். அதோடு புதிய ரூபாய் நோட்டுகளில் ஒருபுறம் காந்தியடிகளின் படத்தை வைத்து விட்டு மறுபுறம் லட்சுமிதேவி, விநாயகரின் படங்களை சேர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல புதிய ரூபாய் நோட்டுகளில் இரு தெய்வங்களின் உருவங்கள் இருப்பது நாடு செழிப்பாக இருக்க உதவும் நாம் என்னதான் முயற்சிகளை மேற்கொண்டாலும் கடவுள்களின் ஆசி இல்லை என்றால் சில நேரங்களில் நம்முடைய முயற்சிகளுக்கு பலன் இருக்காது என்று கூறினார். இது குறித்து பிரதமருக்கு கடிதம் எழுத இருப்பதாக தெரிவித்திருந்தார் அரவிந்த் கெஜ்ரிவால். இந்த தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை உண்டாக்கியது.

இந்த நிலையில் எப்போதும் சனாதனம் மற்றும் சிறுபான்மையினர் நலன் என்று பேசிக் கொண்டிருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எப்போதும் போல இதிலும் தன்னுடைய சனாதனக் கொள்கையை புகுத்த முயற்சி செய்து வருகிறார்.

எப்போதும் இந்துக்களுக்கும், இந்து மத நம்பிக்கைகளுக்கும் எதிராக செயல்படும் திருமாவளவன் தான் ஒரு இந்து இல்லை என்று எந்த இடத்திலும் மறுத்ததில்லை ஆனால் சிறுபான்மையினரின் வாக்குகளை பெரும் ஒரே நோக்கத்தோடு இந்து மத நம்பிக்கைகளையும் இந்து மத பெண்களையும் இழிவாக பேசி வருகிறார். அதோடு இந்து தெய்வங்களையும் கொச்சைப்படுத்தும் விதமாக அப்போது பேசி வருகிறார்.

ஆனால் இந்த உபதேசம் எல்லாம் ஊருக்குத்தான் என்பதை போல தன்னுடைய சொந்த விஷயத்தில் அவர் பல சமயங்களில் இந்துமத கொள்கைகளை கடைபிடித்துள்ளார். அது சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.

கடவுள் மறுப்பு கொள்கை என்று ஒரு சித்தாந்தத்தை கையில் எடுத்து விட்டால் இறுதி வரையில் அந்த கொள்கையின் மீது உறுதியான பிடிப்புடன் இருக்க வேண்டும் அதற்கு ஒரு சாட்சி மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி என்று சொன்னால் அது மிகையாகாது.

ஆனால் திருமாவளவன் எப்பொழுதும் சனாதனம் மற்றும் கடவுள் மறுப்பு கொள்கையை பற்றி பேசுபவர் இருந்தாலும் தனக்கென்று வந்துவிட்டால் மட்டும் அவருடைய கொள்கை அனைத்தும் காற்றில் பறக்க விடப்படும் ஊருக்காக கடவுள் மறுப்பாளராக தன்னை வெளி காட்டிக் கொள்ளும் இவர் தன்னுடைய பல சொந்த விஷயங்களில் இந்து மதக் கொள்கையை பின்பற்றுகிறார் என்று சொன்னால் அது மிகையாகாது ஆனால் இவை அனைத்தையும் அறியாத பாமர மக்கள் அவருடைய வாக்கு அரசியலை மட்டும் பார்த்துவிட்டு அவருக்கு வாக்களித்து விடுகிறார்கள்.

இந்த நிலையில் அரவிந்த் லட்ச ரூபாய் தொடர்பாக திருமாவளவன் தன்னுடைய வலைதளப்பதிவில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது அரவ் இந்து கெஜ்ரிவால் ரூபாய் தாள்களில் விநாயகர் லட்சுமி உருவங்களை அச்சிட சொல்வது குஜராத் மக்களை ஏய்க்கும் தேர்தல் நாடகமா? அல்லது சங்பரிவார்கள் அரசியல் தாக்கமா? அப்பாவி இந்துக்களை ஏமாற்றும் சூதாட்டமா? அல்லது சங்பரிவார்களை தணிக்கும் தன்னல சூழ்ச்சியா? என்று கேள்வி எழுப்பியுள்ள்ளார்.

ஆனால் அப்பாவி இந்துக்களை ஏமாற்றும் செயலா என்று அரவிந்த் கஜ்ரிவாலை கேள்வி எழுப்பும் திருமாவளவன் இதே இந்துக்கள் கடைபிடிக்கும் பல இந்து மத நம்பிக்கைகளை கொச்சைப்படுத்தும் விதமாக பேசியவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version