POLITICS: விஜய் மற்றும் திருமாவளவன் ஒரே மேடை சந்திப்பால் கூட்டணியில் ஏற்படும் குழப்பம்.
விடுதலை சிறுத்தை கட்சி உட் கட்சியின் நெருக்கடிகளாலும், திமுகவின் நெருக்கடிகளாலும் இரண்டு பக்கமும் அடி வாங்கி வருவதாக வி சி க நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர். வி சி க கட்சியின் துணை பொது செயலாளர் ஆதவ் அர்ஜுன் டிசம்பர் 6 ம் தேதி அம்பேத்கர் கட்டுரை அடங்கிய புத்தகத்தை வெளியிடுகிறார்.
இந்த புத்தக விழாவில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கலந்து கொள்ள உள்ளார். இதில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு அந்த புத்தகத்தை வெளியிட தவெக தலைவர் விஜய் பெற்று கொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தவெக தலைவர் விஜய் முதல் மாநில மாநாட்டில் நேரடியாக திமுக வை எதிர்ப்பதாக கூறினார். அதனால் இந்த இருவரும் ஒரே மேடையில் சந்திக்கும் நிகழ்வில் திமுகவுக்கு துளியும் விருப்பமில்லை. முதல்வர் மட்டுமல்லாமல் அனைத்து திமுக தலைவர்களும் அதிருப்தியில் உள்ளனர்.
மேலும் மேடையில் பேசிய முதல்வர் ஸ்டாலின் புதுசு புதுசா வரவன் எல்லாம் திமுக வ அளிக்கணும்னு வரானுங்க அதெல்லாம் முடியாது என மேடையில் பேசியிருந்தார். இந்த பேச்சு விஜய் யை குறிப்பிட்டு தான் பேசியதாக கருதப்பட்டது. இவ்வாறு முதல்வர் பேசிய பிறகு திருமா இதுபோன்ற நிகழ்வில் கலந்து கொள்ள மாட்டார் என எதிர்பார்த்த நிலையில் இருவரும் ஒரே மேடையில் சந்திப்பது உறுதியானது.
இது போன்று திமுக கூட்டணி கட்சியாக இருந்து கொண்டு விரும்பாத ஒரு விஷயத்தில் ஈடுபடுவது தவறான ஒன்று. இதுபோன்ற விஜய் உடன் ஒரே மேடையில் கை குலுக்குவது நாகரீகமானது அல்ல. இவ்வாறு நடந்து கொள்வதற்கு திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறேன் என்று வெளிப்படையாக கூறி விடலாம் என்று திமுக மூத்த தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர்.