Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திடீர் திருப்பம்…! நடிகை குஷ்புவை கதறவிட்ட திருமாவளவன்…!

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னால் தன்னை ஊர் ஊராக அதை வைத்து நீதிமன்றப் படியேற வைத்த திருமாவளவன் அவர்களை இப்போது பழி தீர்த்து இருக்கின்றார் என்று சொல்கிறார்கள்.

சென்ற 2005 ஆம் ஆண்டு இந்தியா டுடே வார இதழ் உடலுறவு சம்பந்தமான ஒரு ஆய்வு நடத்தி வெளியீடு செய்தது.

அதில் திருமணத்திற்கு முன்பாகவே பல பெண்கள் உடல் உறவில் ஈடுபடுவதாக இந்தியா டுடே வார இதழ் தெரிவித்திருந்தது.அது குறித்து கருத்து தெரிவித்த நடிகை குஷ்பு தமிழ் இன பெண்களுக்கு இப்போது கற்பு என்ற ஒரு விஷயமே இல்லாமல் போய்விட்டது.

என்கிற ரீதியாக பேசியிருக்கிறார் அதோடு மட்டும் நிறுத்தாமல் தமிழ்நாட்டில் பெண்கள் திருமணத்திற்கு முன்பாகவே உடலுறவு வைத்து கொள்வதாகவும் குஷ்பூ தெரிவித்து இருக்கிறார்.

அதோடு திருமணத்திற்கு முன்னால் உடலுறவு வைத்துக் கொள்ளும் பெண்மணிகள் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை பின் தொடர வேண்டும் எனவும் தனது அறிவுரைகளை தெரிவித்து இருந்தார்.

இந்த கருத்து அப்போதைய காலகட்டத்தில் மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியோர் கையில் எடுத்தார்கள்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகை குஷ்புவுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை அறிவித்திருந்தார் நடிகை குஷ்பு தமிழ் பெண்களின் கற்பையும் இழிவு செய்துவிட்டதாக ஆவேசமாக பேசியிருந்தார்.

தமிழ்நாடு முழுவதிலும் நடிகை குஷ்புவிற்கு எதிரான நிலை ஏற்பட்டது நடிகை குஷ்புவின் வீட்டை தாக்குவதற்கு ஒரு சிலர் முயற்சி செய்திருந்தார்கள் அவர் தமிழ்நாட்டில் எங்குமே நடமாட இயலாது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மிரட்டும் விதமாக கூறியிருந்தார்.

இந்த சூழ்நிலையில் சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றார். நடிகை குஷ்பூ இங்கே இருந்தால் தான் தாக்கப்படும் என்று பயந்து வெளிநாட்டிற்கு அவர் தப்பி விட்டதாக கூறப்பட்டது.

இந்த சூழ்நிலையில்தான். எந்தப் பெண்களின் பிரச்சனையில் தன்னை திருமாவளவன் மாட்ட வைக்க முயற்சி செய்தாரோ அதே பிரச்சனையில் திருமாவளவன் அவர்கள் சிக்கி இருக்கின்றார்.

அதனைத் தொடர்ந்து ஒட்டுமொத்த தமிழ் பெண்களையும் அவர் விபச்சாரிகள் கூறியிருப்பதாக பாரதிய ஜனதா கட்சியினர் சர்ச்சை கிளப்பினர். அடுத்த நிமிடமே நடிகை குஷ்பு திருமாவளவனுக்கு எதிராக களமிறங்கியிருக்கிறார்.

சென்னை கமலாலயத்தில் திருமாவளவனுக்கு எதிர்ப்பு தெரிவித்து பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடத்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என மிரட்டினார். அதோடு மட்டும் நிறுத்தாமல் திருமாவளவனின் தொகுதியான சிதம்பரத்தில் போராட்டத்தையும் அறிவித்திருந்தார்.

அப்போராட்டத்திற்கு போகும் வழியில் தான் அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டு. ஒரு சொகுசு விடுதியில் அடைத்து வைக்கப்பட்டார் .

எந்த பிரச்சனையை அடிப்படையாக வைத்து. திருமாவளவன் தன்னை அழகாக வைத்தாரோ இப்போது அதே பிரச்சனையை ஆயுதமாக கையில் எடுத்து திருமாவளவனை கதற வைத்து இருக்கிறார் நடிகை குஷ்பு.

Exit mobile version