VCK-TVK: அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவிற்கு விஜய் வந்தால் கலந்து கொள்ள மாட்டேன் திருமாவளவன் அதிரடி முடிவு.
தமிழகத்தில் விஜய் தவெக கட்சி தொடங்கிய நாள் முதல் அனைத்து அரசியல் தலைவர்களின் பார்வை அதன் மேல் தான் இருக்கிறது. விஜயின் கட்சிக்கு ஆதரவு எதிர்ப்பு என பல கருத்துக்களை தெரிவித்தார்கள் அரசியல் கட்சியினர். அந்த வகையில் விசிக தலைவர் திருமாவளவன் ஆதரவு தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் தான் சமீபத்தில் நடந்த தவெக கட்சி மாநாட்டில் திமுக கட்சியை முழுமையாக எதிர்த்தார் விஜய். மேலும் தவெக கட்சியுடன் கூட்டணி வைக்கும் கட்சிக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கொள்கை அறிவிப்பை வெளியிட்டார். இதற்கு பிறகு திருமாவளவன் விஜய் தவெக கட்சி கொள்ளை குறித்து எதிர்ப்பு தெரிவித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
மேலும் திமுகவுடன் மட்டுமே விசிக கூட்டணி வைக்கும் என்ற கட்சி நிலைபாட்டை அறிவித்தார் திருமாவளவன். இந்த நிலையில் தான் சென்னையில் நடைபெற உள்ள அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் விஜய் மற்றும் திருமாவளவன் இருவரும் ஒரே மேடையில் பங்கு பெற உள்ளதாக தகவல் வெளியானது. இதனால் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் விசிக தவெக கூட்டணி வைக்கும் என்று சமூக ஊடகங்களில் தகவல்கள் கசிய தொடங்கியது.
இதற்கு மறுப்பு தெரிவித்த திருமா அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா என்பது ஒரு வருடத்திற்கு முன்பாகவே திட்டமிட்ட ஒன்று ஆகும். அந்த விழாவில் விஜய் கலந்து கொள்வார் என விழா குழுவினர் முடிவு செய்த பொது விஜய் அவர்கள் கட்சி
மாநாடு நடத்த வில்லை. ஒரு நிகழ்ச்சியில் பங்கு பெற்றால் கூட்டணி வைப்பார்களா என்ற கேள்வியை எழுப்பி இருந்தார் திருமா.
இந்த நிலையில் தற்போது அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவிற்கு விஜய் வந்தால் திருமாவளவன் கலந்து கொள்ள போவதில்லை என தகவல் வெளியாகி வருகிறது.