Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

புதுச்சேரியில் புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டார் திருமுருகன்!!

#image_title

புதுச்சேரியில் புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டார் திருமுருகன்!!

புதுச்சேரி அமைச்சரவையில் புதிய அமைச்சராக திருமுருகனை சேர்க்க குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.

புதுச்சேரியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த சந்திர பிரியங்கா தனது அமைச்சர் பதவியில் சரியாக செயல்படவில்லை என கடந்த அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி அவரை பதவி நீக்கம் செய்தது புதுச்சேரி அரசு.

அன்றிலிருந்து கடந்த ஆறு மாதமாக காலியாக இருந்த அவரது அமைச்சர் பதவியில் திருமுருகனை சேர்க்க புதுச்சேரி அரசு குடியரசு தலைவரிடம் கோரிக்கை கடிதம் வழங்கியது அரசின் கோரிக்கையை ஏற்று திருமுருகனை அமைச்சர் பதவியில் நியமிக்க ஒப்புதல் அளித்தார் இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு.

Exit mobile version