Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அரசியல் ஆடுகளை மேய்ப்பவர்களுக்கு அறிவுசார் அரசியல் உறுத்தவே செய்யும்! மே 17 இயக்கம் நெத்தியடி!

அரசியல் ஆடுகளை மேய்ப்பவர்களுக்கு அறிவுசார் அரசியல் உறுத்த தான் செய்யும் என்று மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஆவேசமாக தெரிவித்திருக்கிறார்.

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி விமர்சனம் குறித்து பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை இடம் கேள்வி எழுப்பிய போது அதற்கு அவர் தெரிவித்த பதில் வருமாறு, மாதம் மற்றும் நாள் பெயரில் இயக்கத்திற்கு பெயர் வைத்தவர்களுக்கெல்லாம் நாங்கள் பதில் சொல்ல இயலாது. அதோடு தாங்கள் 18 கோடி உறுப்பினர்களை கொண்ட மிகப்பெரிய கட்சி, நாட்டினை ஆண்டு கொண்டிருக்கக்கூடிய கட்சி, பல மாநிலங்களில் ஆளும் கட்சியாக இருக்கின்றோம். இதன் காரணமாக, லெட்டர்பேடு கட்சிகளுக்கெல்லாம் நாங்கள் பதில் சொல்ல இயலாது என்று மிகக் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். இது குறித்த வீடியோ ஒன்று தற்சமயம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இவ்வாறு தெரிவித்த அண்ணாமலைக்கு திருமுருகன் காந்தி தற்சமயம் பதிலடி கொடுத்திருக்கிறார்.

அண்ணாமலையின் இந்த விமர்சனம் தொடர்பாக மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் வெளியிட்டிருக்கின்ற வலைதளத்தில் இயக்கங்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல இயலாது ஏனென்றால் நாங்கள் மிகப் பெரிய கட்சி அதிகாரத்தில் இருக்கக்கூடிய கட்சி திருவண்ணாமலை தெரிவிக்கிறார். அவ்வளவு பலமிக்க ஒரு கட்சி எதற்காக மே 17 இயக்கத்தை டிவி விவாதங்களில் பங்கேற்க தடை விதிக்க வேண்டும்? எதற்காக அவர்கள் வந்தால் நாங்கள் வரமாட்டோம் என்று அடம் பிடிக்க வேண்டும்? என கேள்வி எழுப்பியிருக்கிறார்.

4 வருடகாலமாக விவாதங்களில் பங்கேற்க தடை விதித்தாலும், வழக்குப்போட்டு மிரட்டினாலும், பொதுக்கூட்டங்களை தடை செய்தாலும், எங்களுடைய கேள்விகள் பொது மக்களை சென்றடைகின்றன. உங்களுடைய பிரதமரே ஊடகங்களை எதிர்கொள்வதற்கு மறுத்துக் கொண்டு தானே உள்ளார். அரசியல் ஆடுகளை மேய்ப்பவர்கள் அறிவுசார் அரசியல் உறுத்ததான் செய்யும் என்று பதிவிட்டு இருக்கிறார்.

Exit mobile version