Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திருப்பதி தேவஸ்தானத்தின் டிசம்பர் மாத ரூ:300 டிக்கெட் முன்பதிவு இன்று துவக்கம்!!!

#image_title

திருப்பதி தேவஸ்தானம் பொதுமக்கள் அதிகம் சென்றுவழிபடும் கோவிலாகும். இக்கோவிலுக்கு ஆந்திரா,தெலுங்கான ,கர்நாடக,கேரளா போன்ற தென்மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி வடநாட்டு பக்தர்களும் கணிசமான அளவு வந்து செல்கின்றனர்.இந்நிலையில் திருப்பதியில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா ஆரம்பமாகியுள்ளது.இதனைதொடர்ந்து இன்று முதல் ரூ.300 டிக்கெட் முன்பதிவு இணையத்தில் துவங்கியுள்ளது.

இந்நிலையில் டிசம்பர் மாதத்திற்கான திருமலை திருப்பதி தரிசன முன்பதிவு டிக்கெட்டுகள் இன்று காலை 10 மணியளவில் வெளியிடப்படும் எனவும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.எனவே டிசம்பர் மாதத்தின் 1ம் தேதி முதல் 10 தேதி வரையிலான டிக்கெட்டுகளை https://tirupatibalaji.ap.gov.in என்ற இணைய முகவரியில் முன்பதிவு செய்யலாம் எனவும் தேவஸ்தானம் கூறியுள்ளது.

Exit mobile version