Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திருவள்ளுவருக்கு ருத்ராட்ச கொட்டை நெத்தியில் பட்டை.. அண்ணாமலையின் சர்ச்சை போட்டோ!! வைரலாகும் ட்விட்டர் பதிவு!!

திருவள்ளுவருக்கு ருத்ராட்ச கொட்டை நெத்தியில் பட்டை.. அண்ணாமலையின் சர்ச்சை போட்டோ!! வைரலாகும் ட்விட்டர் பதிவு!!

இன்று திருவள்ளுவர் தினத்தை யொட்டி பல ஊர்களிலும் அவர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து வழிபட்டு வரும் பட்சத்தில் முதல்வர் ஸ்டாலின் திருவள்ளுவர் சிலைக்கு மாலையிட்டு மலர் தூவி மரியாதை செலுத்தியதோடு திருவள்ளுவர் விருது போன்றவற்றையும் வழங்கி வருகிறார்.

மேலும் வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் என்ற திட்டத்தின் கீழ் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு குறிப்பிட்ட ஐந்து தொண்டு நிறுவனங்களுக்கு நிதி உதவி வழங்கியுள்ளார்.

மேலும் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பல கட்சி தலைவர்களும் திருவள்ளுவரை வாழ்த்தி அவர்களது சமூக வலைத்தள பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பதிவில் பிறப்போக்கும் எல்லா உயிர்க்கும் என வாழ்த்தி உலகப் பொதுமறை தந்த தமிழ் மறையும் திருவள்ளுவர் பெருமானார் பெரும் புகழ் போற்றி போற்றி என்று திருவள்ளுவரை வணங்கி பதிவிட்டுள்ளார்.

ஆனால் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிவிட்ட டிவிட்டர் பதிவு மட்டும் தற்பொழுது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் திருவள்ளுவருக்கு பட்டை இட்டும் ருத்ராட்ச கொட்டை அணிந்தபடியும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தின் மூலம் நாங்கள் வலது சாரி என்று திட்டவட்டமாக கூறுவதுடன் ஆர்எஸ்எஸ் அமைப்பு எங்களது பின்னால் உள்ளது என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டார்.

முன்னதாகவே தமிழகத்தில் உள்ள பாடப் புத்தகங்களில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிந்த விவகாரம் தற்பொழுது தான் முடிவுற்ற நிலையில் மீண்டும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திருவள்ளுவரை சாதி வாரியாக அடையாளம் காண்பித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இவ்வாறு இவர் செய்ததற்கு பல தரப்பிலிருந்தும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

Exit mobile version