பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் கொண்டாடப் பட்டு வருகிறது இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை மாலை 6 மணிக்கு அருணாச்சலேஸ்வரர் கோவில் பின்புறமுள்ள 2668 அடி உயர உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.
திருமாலுக்கும் பிரம்மனுக்கும் இடையே ஏற்பட்ட “தான்” என்ற அகந்தையை போக்க சிவபெருமான் திருவண்ணாமலையில் அடிமுடி காண முடியாத அக்னி பிழம்பாக காட்சி அளித்ததாக ஐதீகம் அந்த நாளே கார்த்திகை தீபத்திருவிழா திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
பவுர்ணமி மற்றும் கார்த்திகை தீபத் திருவிழா நாட்களில் பல லட்சம் பக்தர்கள் அந்த மலையை சுற்றி கிரிவலம் செல்கின்றனர் இந்த நிலையில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் சாமி சன்னதியில் ஆடியபடியே வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார்.
அர்த்தநாரீஸ்வரர் காட்சி தந்ததும் சரியாக மாலை 6 மணிக்கு சன்னதி முன்பு அகண்ட தீபம் ஏற்றப்படும் அதே நேரத்தில் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும்.
மகா தீபம் ஏற்றப்பட்டதும் 14 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட கிரிவலப்பாதையில் இருக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலையை நோக்கி மகா தீபத்தை வணங்குவார்கள் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் பாதுகாப்பு பணிக்காக சுமார் 10,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் மகாதீபம் ஏற்றும் மலை உச்சியில் கமாண்டோ வீரர்கள் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்படுகிறார்கள்.