திருவண்ணாமலை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி பரிசு!

0
193
திருவண்ணாமலை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி பரிசு!

திருவண்ணாமலை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி பரிசு!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் நடைபெறும் கார்த்திகை மகா தீபத் திருவிழா ஒவ்வொரு வருடமும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.  திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் பிளாஸ்டிக் பைகள் ஆகியவற்றை பயன்படுத்தி வந்தனர்.  இவர்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள்,  கிரிவலப்பாதை முழுவதும் தேங்கிக் கிடக்கின்றன. இதனால் பெருமளவிலான மாசு கேடு ஏற்படுகிறது.  மேலும் பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்து செல்வது உள்ளாட்சித் துப்புரவு பணியாளர்களுக்கு பெரும் சவாலாக இருப்பதுடன், சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிப்பதாக உள்ளது.

இந்நிலையில் தமிழக அரசு விழா காலத்தில் உருவாகும் பிளாஸ்டிக் குப்பைகளை தவிர்க்கவும், பொதுமக்கள் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப்பை, சனல் பை, மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த தூக்கு பைகளை உபயோகப்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில்,  திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் கார்த்திகை திருவிழாவிற்கு துணிப்பை சணல் பை மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பிற பைகளை எடுத்து வரும் பொதுமக்களுக்கு குலுக்கல் முறையில் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் வழங்கும் திட்டத்தினை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.

பக்தர்களுக்கு கணினி மூலம் குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்பட்டு இரண்டு கிராம் தங்க நாணயங்களும் 10 கிராம் வெள்ளி நாணயங்களும் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.  தடை செய்யப்பட்டுள்ள ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை குறைக்கும் வண்ணமும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணி மற்றும் சணல் பைகளை எடுத்து வரும் பக்தர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த வருட கார்த்திகை தீப திருவிழாவில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 12 நபருக்கு, தலா 2 கிராம் தங்கம் மற்றும் 72 நபருக்கு, தலா 10 கிராம் வெள்ளி நாணயங்கள் வழங்க மாசுகட்டுப்பாடு வாரியம் மாவட்ட நிர்வாகமும் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளது.  அதுமட்டுமல்லாமல் சுற்றுச்சூழலுக்கு உகந்த பைகளைக் கொண்டுவந்து கூப்பன் பெறும் ஒவ்வொரு நபருக்கும் ஒரு துணிப்பை வழங்கப்பட இருக்கிறது.