திருவாரூர் மத்திய பல்கலைகழக இறுதி ஆண்டு தேர்வுகள் உட்பட அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் 24 தேதி முதல் ஜூன் 30 வரை உறடங்கு அமைக்கப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருப்பதால் மாணவர்களின் நலன் கருதி 1 முதல் 9 ஆம் வகுப்பு தேர்வுகள், 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. கொரோனா தாக்கத்தை கருத்தில் கொண்டு பல்வேறு தனியார் கல்லூரிகளும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்வதாக அறிவித்து உள்ளது.
இதனையடுத்து திருவாரூர் மத்திய பல்கலைகழக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு இறுதி ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த முடிவு செய்யபட்டிருந்த நிலையில் தற்பொழுது திருவாரூர் மத்திய பல்கலை கழகம் இறுதி ஆண்டு தேர்வுகளையும் ரத்து செய்துள்ளது.
இதனையடுத்து இறுதி ஆண்டு மாணவர்களுக்கு முந்தைய பருவத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் சான்றிதழ் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.