இந்த 1 கிளாஸ் போதும் எப்பேர்ப்பட்ட வறட்டு இருமலும் சரியாக!!

0
146
#image_title

இந்த 1 கிளாஸ் போதும் எப்பேர்ப்பட்ட வறட்டு இருமலும் சரியாக!!

தொண்டை கரகரப்பு, தொண்டைப்புண், வரட்டு இருமல் போன்ற பிரச்சனைகள் இருப்பவர்கள் தண்ணீர் அருந்துவதில் கூட கடினம் இருக்கும்.

சளி , இருமல், போன்ற காரணங்களினால் ஏற்படும் தொண்டை வலியை மஞ்சள் தூள், தேன், இஞ்சி , எலுமிச்சை, துளசி, மிளகு போன்ற வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சரி செய்யலாம்.

இதேபோன்று ஒரு டம்ளர் வெதுவெதுப்பாக இருக்கும் தண்ணீரில் அரை ஸ்பூன் உப்பை போட்டு நன்கு கலந்து கொள்ளுங்கள். தண்ணீரை தொண்டைக் குழியில் படும்படி சிறிது நேரம் கொப்பளிக்க வேண்டும். ஒரு நாளைக்கு 2-3 முறை செய்து வந்தால் தொண்டை வலிக்கு நிவாரணம் பெறலாம்.

ஒரு டம்ளர் பாலை நன்கு காய்ச்சி அதில் கால் டீஸ்பூன் அளவிற்கு மஞ்சள் தூள் சேர்த்துக் கொதிக்க வைத்து எடுத்துக்கொள்ளுங்கள். அதில் பனங்கற்கண்டு அல்லது வெல்லம் சேர்த்து வெதுவெதுப்பாக குடித்து வருகையில் தொண்டைப்புண் சரியாகும்.

வெற்றிலை உங்கள் தொண்டை வலியை குணமாக்க உதவுகிறது. வெற்றிலை மற்றும் துளசியை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு மிதமான சூட்டில் தண்ணீர் பாதியாகும் வரை கொதிக்க வைக்கவும். இத்திரவத்தை வடிகட்டி உப்பு அல்லது தேன் சேர்த்து குடித்து வருகையில் தொண்டைப்புண் சரியாகும்.

ஒரு டம்ளர் நீரில் திரிபலா சூரணம் சேர்த்து கொதிக்கவைக்க வேண்டும். சிறிது நேரம் கொதித்த பிறகு அதில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விட வேண்டும். பிறகு கொதித்த நீரை சிறிது ஆறவிட்டு அதை தொண்டையில் படும்படி வாய் கொப்பளிக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் தொண்டை வலி குணமாகும்.

துளசி இலை மற்றும் கற்பூரவள்ளி இலையை மென்று கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடலாம். இதன் மூலம் தொண்டை வலி குணமாகும்.