Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வெரிகோஸ் வெயின் பிரச்சனைக்கு இந்த 1 மருத்துவம்தான் 100% தீர்வளிக்கும்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

#image_title

வெரிகோஸ் வெயின் பிரச்சனைக்கு இந்த 1 மருத்துவம்தான் 100% தீர்வளிக்கும்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

வெரிகோஸ் வெயின்

வெரிகோஸ் வெயின் நோயின் பாதிப்பை நாம் பலரும் பார்த்திருப்போம். இது ஏற்படக் காரணம் பல உண்டு. ஒருவர் அதிக உடல் எடையுடன் இருப்பது, நீண்ட நேரம் ஒரே இடத்தில் நின்று வேலை செய்வது போன்று பல காரணங்கள் உள்ளது. இதனால் நரம்புகளில் புடைப்புகள் ஏற்படுகின்றது. நரம்பு புடைப்பு ஏற்படுவதால் இரத்த ஓட்டம் தடைபட்டு நரம்பு முடிச்சுகள் சுருண்டு கொள்கிறது. இந்த வெரிகோஸ் வெயின் பாதிப்பிற்கு சரியான டயட் முறையே தீர்வு என்றாலும் ஹோமியோபதியில் இதற்கு பல தீர்வுகள் உள்ளது.

வெரிகோஸ் வெயின் பிரச்சனையை கட்டுப்படுத்த நாம் செய்ய வேண்டியது உணவு கட்டுப்பாடு என்பது தெரிந்த ஒன்று. உலகின் பல்வேறு நாடுகளில் இந்த வெரிகோஸ் வெயின் பாதிப்பிற்கு மாற்று சிகிச்சை முறை உள்ளது. அதைப் போலவே நம் நாட்டிலும் ஹோமியோபதி மருத்துவ முறையில் வெரிகோஸ் வெயின் பிரச்சனைக்கு சிகிச்சை முறைகள் இருக்கின்றது. பக்க விளைவுகள் இல்லாமல் வெரிகோஸ் வெயின் பிரச்சனைக்கு ஹோமியோ பதியில் என்னென்ன சிகிச்சை முறை உள்ளது என்பதை பார்க்கலாம்.

ஹமாமெலிஸ்

ஹமாமெலிஸ் என்பது வெரிகோஸ் வெயின் பிரச்சனையை போக்கும் ஒரு வகையான மருந்து. கடுமையான வெரிகோஸ் வெயின் பிரச்சனை உள்ளவர்களுக்கு நரம்பு முடிச்சுகளில் அதிக அழுத்தம் ஏற்படும். இந்த அழுத்தமானது இரத்தப் போக்கு அல்லது வலியை ஏற்படுத்தும்.

இந்த இரத்தப்போக்கையும், வலியையும் கட்டுப்படுத்த ஹமாமெலிஸ் எனப்படும் மருந்து ஹோமியோபதியில் பயன்படுத்தப்படுகிறது.

பல்சட்டிலா

வெரிகோஸ் வெயின் பிரச்சனை உள்ளவர்களுக்கு கால்களில் அதிக கனம் அல்லது அதிக வலி இருக்கும். இதனால் நரம்பு முடிச்சுகள் நீலம் அல்லது ஊதா நிறத்தில் இருக்கும். ஆகவே வெரிகோஸ் வெயின் பிரச்சனையால் கால்களில் வீக்கம் உள்ளவர்களுக்கு ஹோமியோபதியில் வழங்கப்படும் மருந்து தான் பல்செட்டிலா.

ஆர்னிகா

ஆர்னிகா எனப்படும் மருந்தானது வெரிகோஸ் வெயின் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்டாகும் ஹீமாடோமா எனப்படும் நரம்பு அழுத்தங்களை நீக்க ஹோமியோபதியில் வழங்கப்படும் மருந்தாகும்.

ஆர்னிகா மருந்தானது வெரிகோஸ் வெயின் பிரச்சனையால் ஏற்படும் வீக்கம், சிராய்ப்பு, காயங்கள், இரத்தம் வடிதல் போன்ற பிரச்சனைகளை கட்டுப்படுத்த வழங்கப்படுகிறது.

ஈஸ்குலஸ்

வெரிகோஸ் வெயின் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கால்களில் கனம் அதிகமாக இருக்கும்போதும், கால்களில் அதிகப்படியான அழுத்தம் இருக்கும்போதும் இந்த ஈஸ்குலஸ் மருந்து வழங்கப்படுகிறது.

வெரிகோஸ் வெயின் நோயினால் பாதிக்கப்பட்டு கால்களில் கூர்மையான வலியை உணர்பவர்களுக்கு இந்த ஈஸ்குலஸ் மருந்து வழங்கப்படுகிறது.

கால்கேரியா ஃபுளோரிகா

கால்கேரியா ஃபுளோரிகா மருந்தானது வெரிகோஸ் வெயின் பிரச்சனையால் நரம்புகள் புடைத்து வீங்கியிருப்பவர்களுக்கு கொடுக்கப்படும் ஹோமியோபதி மருந்தாகும்.

கால்கேராயா ஃபுளோரிகா மருந்தானது நரம்புகளில் இரத்த ஓட்டத்தை சீராக்கி ரத்தம் உறைதல், நரம்புகளில் அதிவேகமாக ரத்தம் பாய்ந்து நரம்புகள் சுருண்டு கோள்ளுதல் போன்ற பிரச்சனைகளை தடுக்கின்றது.

வெரிகோஸ் வெயின் பிரச்சனைக்கு மருத்தவ ஆலோசனை

வெரிகோஸ் வெயின் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹோமியோபதி மருத்துவமுறை நல்ல தீர்வை கொடுக்கும். ஆனால் எல்லாருக்கும் நல்ல தீர்வை கொடுக்கும் என்று சொல்ல முடியாது. அதனால் நீங்கள் வெரிகோஸ் வெயின் பிரச்சனைக்கு மருந்து எடுத்துக் கொள்வதற்கு சிறந்த ஹோமியோபதி மருத்துவரை கேட்டு அவரிடம் நோயின் தீவிரத்தை கூறி மருத்துவருடைய ஆலோசனைக்கு தகுந்த மாதிரி மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

Exit mobile version