Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆண்கள் குதிரை பலம் பெற இந்த 1 விதை போதும்!!

#image_title

ஆண்கள் குதிரை பலம் பெற இந்த 1 விதை போதும்!!
சிலருக்கு ஆண்மைக் குறைபாடு, உடல் சூடு, உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் இருக்கும். இந்த பிரச்சனைகளை சரி செய்ய என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
நத்தை சூரி என்பது உயிரினம் அல்ல. இது அரிய வகை மூலிகைகளுள் ஒன்று. நத்தை சூரி என்ற வித்தியாசமான பெயருக்கு ஏற்ப இது பலவிதமான நோய்களை சரி செய்யும் தன்மை கொண்டது. இந்த நத்தை சூரி மூலிகையில் கால்சியம், பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன. இதனால் சித்த மருத்துவத்தில் எலும்பு தொடர்பான நோய்களை குணப்படுத்த இது உதவுகின்றது.
நத்தை சூரியின் மருத்துவ குணம்…
நத்தை சூரி என்பது பூண்டு வகையை சேர்ந்த தாவரமாகும். நத்தை சூரியின் விதை, வேர் ஆகியவை மருத்துவ குணம் உடையது. நத்தை சூரி மூலிகை செடியை குழி மீட்டான், தாருணி, கடுகம், நத்தைச் சுரண்டி, தொலியாகரம்பை என பல பெயர்களில் அழைக்கின்றனர்.
உடல் சூட்டை தணிக்கும் நத்தை சூரி…
நம் உடலில் இருக்கும் சூட்டை தணிக்க நத்தை சூரி மூலிகை செடி பெரிதும் உதவியாக உள்ளது. நத்தை சூரி செடியின் விதைகளை லேசாக வறுத்து அதை பொடியாக்கி கொள்ள வேண்டும். இந்த பொடியை ஒரு ஸ்பூன் அளவு எடுத்து பாலில் கலந்து சுவைக்காக அதில் சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து குடிக்க வேண்டும்.
இதை காலை, மாலை என இரண்டு வேலைகளிலும் குடிக்க வேண்டும். இதனால் உடல் சூடு குறையும். உடலில் தேவையற்ற இரசாய வேதிப் பொருட்களை வெளியேற்றும். சிறுநீரகக் கல்லடைப்பை தடுக்கும்.  இரத்தத்தை சுத்தப்படுத்தவும் உதவுகின்றது.
இந்த நத்தை சூரியின் விதையை எடுத்து பொடியாக்கி ஒரு ஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டால் சீதபேதி, வயிற்றோட்டம் ஆகியவை சரியாகும்.
உடல் பருமனை குறைக்க உதவும் நத்தை சூரி…
நத்தை சூரியின் விதைகளை வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுத்து பொடியாக்கி கொள்ள வேண்டும். பிறகு இதை நீரில் கலந்து நன்கு காய்ச்சி அதில் பால் கலந்து காலை, மாலை என இரண்டு வேலைகளில் குடிக்க வேண்டும். இதனால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்து வெளியேறுவதால் உடல் பருமன் குறையும். மேலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏற்படும் வெள்ளை, வெட்டை நோய்கள் குணமாகும்.
தாய்ப்பாலை அதிகரிக்கும் நத்தைச் சூரி மூலிகை…
நத்தை சூரி மூலிகை தாய்ப்பாலை  அதிகரிக்கவும் உதவுகின்றது. 10 கிராம் நத்தை சூரி வேரை வெயில் காய வைத்து பொடியாக்கி அதை பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் தாய்ப்பால் அதிகரிக்கும். மேலும் இந்த நத்தை சூரி மூலிகை பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் அதிக இரத்தப் போக்கை தடுக்கும். மேலும் இது வெள்ளைப்படுதலையும் குறைக்கும்.
ஆண்மை பலத்தை அதிகரிக்கும் நத்தை சூரி…
நத்தை சூரி விதையை எடுத்து அதை அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து அதை ஒரு டம்ளர் பாலில் கலந்து தினமும் இரண்டு வேலை குடிக்க வேண்டும். இதனால் உடல் பலமடையும். ஆண்மை பலம் அதிகரிக்கும். மேலும் நத்தை சூரி மூலிகையின் வேர் நோய் தீர்க்கும் தன்மை கொண்டது. உடலை தேற்ற இது உதவுகின்றது. வித்துக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் இது உதவுகின்றது. இதன் விதை தாதுக்களின் வெப்பத்தை தணிக்கவும், தாதுக்களின் எரிச்சலை தவிர்க்கவும் இது பயன்படுகிறது.
Exit mobile version