கொழுக் மொழுக்னு இருந்து என்ன பிரயோஜனம்.. ஒரு படமும் ஓடலையே.. இந்தப் படமாவது ஓடுமா –ஏக்கத்தில் பிரபல நடிகை.
‘சிந்துபாத்’ படத்தைத் தொடர்ந்து ‘சங்கத்தமிழன்’, ‘கடைசி விவசாயி’, ‘லாபம்’, ‘மாமனிதன்’, ’சைரா’ உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய் சேதுபதி. இந்தப் படங்களைத் தொடர்ந்து புதுமுக இயக்குநர் தில்லி பிரசாத் இயக்கத்தில் உருவாகும் ‘துக்ளக் தர்பார்’ படத்துக்குத் தேதிகள் ஒதுக்கியுள்ளார்.
‘துக்ளக் தர்பார்’ படத்தின் வசனங்களை ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ இயக்குநர் பாலாஜி தரணிதரன் எழுதவுள்ளார். ’96’ இயக்குநர் ப்ரேம்குமார் ஒளிப்பதிவாளராகப் பணிபுரியவுள்ளார். இதன் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாத ஆரம்பத்தில் தொடங்க படக்குழு ஆயத்தமாகி வருகிறது.

இப்படம் முழுக்க அரசியல் சாந்த படமாக உருவாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பார்த்திபன், அதிதி ராவ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். இவர்களைத் தொடர்ந்து மஞ்சிமா மோகனும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனைப் படக்குழு தங்களது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளது.
கௌதம் மேனனின் ஹீரோயின் என்ற பெருமையுடன் ‘அச்சம் என்பது மடமையடா’ படம் மூலம் அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். ஆனால், அந்தப் படம் பெரிதாக எடுபடவில்லை. அதன்பிறகு அவர் நடித்த ‘இப்படை வெல்லும்’, ‘சத்ரியன்’, ‘தேவராட்டம்’ போன்ற படங்களும் படு தோல்வியைத் தழுவின.

இந்நிலையில் தான் நடித்த எந்தப் படங்களுமே பெரிய வெற்றி அடையாததால் மிகுந்த மன வருத்தத்தில் இருந்தார் மஞ்சிமா மோகன். இந்நிலையில் விஜய் சேதுபதியுடன் தான் முதன்முறையாக ஜோடி சேரும் இந்தப் படமாவது தனது களங்கத்தை துடைக்குமா என நம்பிக்கையோடு எதிர்கொண்டிருக்கிறார் மஞ்சிமா மோகன்.
அதெல்லாம் நல்லா வரும் கண்ணு..!
மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.