தமிழகத்தில் பயணங்களின் தேவைகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. மேலும் அதற்கு தகுந்தாற் போல் அரசினால் பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. அதில் குறிப்பாக, கிராமப்புற மக்களின் தேவைக்காக மினி பஸ் வசதிகள் தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் தற்சமயம் வரை 2950 கிட்டத்தட்ட 3000 மினி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழக அரசின் வெளியிட்டின்படி, 25000 மினி பஸ்களை முழுமையாக அமுல் செய்த பின்னர் மக்களின் துயரம் பாதியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மே 1ம் தேதி முதல் குக்கிரமங்களிலும் வசிக்கும் மக்களுக்கு தகுந்தாற் போலும், கிராமப்புறங்களில் உள்ள மக்களின் எண்ணிக்கைக்கு தகுந்தாற் போலும் மினி பஸ் வசதிகள் அலைன் செய்யப்பட்டு வருகின்றன.
இது குறித்து சேலம் ஆட்சியர் பிருந்தா தேவி பின்வருமாறு விளக்கம் அளித்துள்ளார். கிராம மக்களின் வாழ்வியலை கருதி, மேலும் தேவைக்கு ஏற்றார் போல் மினி பஸ்களை செயல்படுத்துவது குறித்து விரிவான தகவல் வெளிவந்துள்ளது. வழித்தடத்தின் நீளம் 25 கிலோமீட்டர் என விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும், புதிய மினி பஸ்ஸுக்கான கட்டணங்களும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இது பழைய மினி பேருந்துகளுக்கும் பொருந்தும். இதில் டிரைவர், கண்டக்டர் இருக்கைகள் தவிர்த்து 25 இருக்கைகள் பயணிகளுக்காக இருக்கும். மக்களின் பயன்பாட்டின் அளவைப் பொறுத்து மினி பஸ்களின் ட்ரிப் எண்ணிக்கை வரையறுக்கப்படும். குறிப்பிட்ட இடத்திற்கு இரண்டிற்கும் அதிகமானவர் விண்ணப்பிக்கப்பட்டால், குலுக்கல் முறையில் மினி பஸ்ஸுக்கான வாகன உரிமையாளர் தேர்வு செய்யப்படும் மற்றும் ஒப்பந்தத்துக்கு தேவையான அனுமதிச்சீட்டும் குலுக்கல் முறையில் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.