Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆதார் அட்டையில் முகவரியை வீட்டில் இருந்தபடியே மாற்ற இத செஞ்சா போதும்!!

இந்திய குடிமக்களின் முக்கியமான ஆவணமாக விளங்கக்கூடிய ஆதார் அட்டையில் எத்தனை முறை வேண்டுமானாலும் முகவரியை இலவசமாக மாற்றிக் கொள்ளும்படி அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது நாம் வேறு ஒரு வீடு மாற்றும் சூழ்நிலை ஏற்படும் பொழுது அந்த வீட்டினுடைய முகவரியை நம்முடைய ஆதார் அட்டையில் இலவசமாக மாற்றிக் கொள்ளலாம்.

 

ஆதார் அட்டையில் முகவரியை மாற்றுவதற்கான வழிமுறைகள் :-

 

ஆதார் ஆணையத்தின் (UIDAI) ஆன்லைன் போர்டல் மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும் ஆதார் கார்டு தகவல்களைப் புதுப்பிக்கலாம். ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் தங்கள் விவரங்களை இலவசமாக புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை ஆதார் ஆணையம் நீட்டித்துள்ளது.

 

அதன்படி இதற்கான அவகாசம் டிசம்பர் 14, 2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இந்தத் தேதிக்குள் எந்த கட்டணமும் இல்லாமல் ஆதார் அட்டையில் உள்ள விவரங்களைத் திருத்திக்கொள்ளலாம். முகவரி, மொபைல் எண் போன்ற எல்லா விவரங்களை இலவசமாக அப்டேட் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

குறிப்பாக, அருகில் உள்ள ஆதார் மையத்திற்கு சென்று கட்டணம் செலுத்தி கைரேகை அல்லது கருவிழி ஸ்கேன் போன்ற பயோமெட்ரிக் அடையாளங்களில் மாற்றம் செய்வது மிகவும் முக்கியமானதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

புதிய முகவரியை அப்டேட் செய்ய பின்பற்ற வேண்டியவை :-

 

✓ myaadhaar.uidai.gov.in என்ற அதிகாரபூர்வ இணையத்திற்குச் சென்று உங்கள் ஆதார் விவரங்களை பயன்படுத்தி உள்நுழையவும்.

 

✓ முகவரியை மாற்ற, JPEG, PNG அல்லது PDF வடிவத்தில் முகவரிச் சான்று (PoA) ஆவணத்தை ஸ்கேன் செய்து அப்லோட் செய்யவும். அப்லோட் செய்யும் ஃபைலின் அளவு 2 MB க்குள் இருக்க வேண்டும்.

 

✓ அதன்பின், முகவரி மாற்றக் கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும். உங்கள் கோரிக்கையின் நிலையைக் கண்காணிக்க, SRN எண் கிடைக்கும்.

 

✓ உங்கள் கோரிக்கையின்படி ஆதார் அட்டையில் முகவரி மாற்றப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த உங்கள் SRN எண்ணை பயன்படுத்தி ஆதார் இணையதளத்தில் சரிபார்த்துக்கொள்ளவும்.

Exit mobile version