தீராத தலைவலியால் அவதிப் பட்ட நபர்! மருத்துவர்கள் தெரிவித்த அதிர்ச்சி தகவல்!

0
123

சீனாவை சேர்ந்த நபர் ஒருவருக்கு சென்ற 20 வருடங்களுக்கு மேலாக தலை வலி இருந்து வந்தது. இதன் காரணமாக,தலைவலி எதனால் உண்டாகிறது என்பதே தெரியாமல் ஒவ்வொரு நாளும் வலியுடன் இருந்து வந்தார் அந்த நபர். நன்றாக தூங்கி எழுந்தாலும் கூட அவருக்கு தலைவலி என்பது தொடர்ந்து கொண்டே இருந்ததாக சொல்லப்படுகிறது.

கடைசியாக மருத்துவ பரிசோதனைக்கு சென்ற அந்த நபருக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது, எம்ஆர்ஐ ஸ்கேன் செய்து பார்த்ததில் அவருடைய மண்டை ஓட்டில் புல்லட் ஒன்று சிக்கியிருப்பது தெரியவந்தது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் தன்னுடைய தலையில் புல்லட் எவ்வாறு வந்தது என்பது தொடர்பாக அவருக்கும் காரணம் தெரியவில்லையென சொல்லப்படுகிறது.

தற்சமயம் அந்த நபருக்கு 28 வயது தான் ஆகிறது தனக்கு 8 வயது இருந்தபோது தன்னுடைய சகோதரரும் தானும் விளையாடிக்கொண்டு இருந்ததாகவும், அப்போது அவர் பயன்படுத்திய ஏர்கன் மூலமாக இந்த புல்லட் பாய்ந்திருக்கலாம் என்றும், தெரிவிக்கிறார் அந்த நபர். சிறிய வயதில் தனக்கு தலையில் காயம் உண்டானது தொடர்பாக ஞாபகம் இருக்கிறது. ஆனால் தலைமுடியை வைத்து மறைத்து தன்னுடைய பெற்றோருக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

மருத்துவர்கள் இதுதொடர்பாக தெரிவிக்கும்போது சுமார் 0.5 சென்டிமீட்டர் முதல் 1 சென்டி மீட்டர் அளவு கொண்ட இந்த புல்லட்டிருந்தது இவர் இவ்வளவு நாட்களாக இந்த புல்லட்டுடன் எப்படி உயிர் வாழ்ந்தார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது என்றும், ஆனாலும் மண்டையோட்டை தாண்டி உள்ளேயிறங்காமல் வெளிப்புறத்திலேயே இருந்ததால் இவருக்கு பெரிய அளவில் ஆபத்தில்லாமல் இருந்திருக்கக்கூடும் என்று கூறியிருக்கிறார்.

அதோடு பொதுமக்கள் யாராவது லேசான தலைவலியென்றால் அதுவும் எப்போதாவது வந்தால் தானாக சிகிச்சையை எடுத்துக்கொண்டு கடந்து செல்வதில் ஒரு பிரச்சனையும் கிடையாது. ஆனாலும் நீண்ட நாள் தலைவலி இருந்தால் அதனை புறக்கணிக்க கூடாது நிச்சயமாக போதுமான மருத்துவ பரிசோதனை செய்து சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.